ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி

178

மணக்குள விநாயகருக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது ஏதாவது புதிய வேலையை தொடங்கும் போது சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.

ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி
ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி
முக்காலம் அறிந்த முழுஞானியே
அருளைப் பொழிந்திடும் குணநிதியே
முழுமுதற் கடவுள் நீயானாய்

முக்கண்ணனின் அன்பு சேயானாய்
வேழ முகம் கொண்ட முதல்வோனே
வேதங்கள் தொழுதிடும் நாயகனே
மூத்தவனே மூஞ்சூறு வாஹனனே
முத்தான முருகனின் சோதரனே
ஆனைமுகம் தனை நீ கொண்டாய்
அகிலம் அனைத்துமே நீ ஆண்டாய்
வாழ்வில் நலம் சேர்க்கும் அருள்நிதியே
வினைகளை தீர்த்திடும் விக்னேஸ்வரனே சரணம்.

ஓம் அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி போற்றி போற்றி.
ஓம் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு ஹரஹரஹோஹரா.
ஓம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்பாள் துணை