ஆரோக்யம் ஆயுஸ், ஸம்பத்து முதலிய பாக்கியங்களைக் கொடுக்கக் கூடியது.
பதஞ்ஜலி மஹரிஷியால் செய்யப்பட்ட து
(ஹாலாஸ்ய மஹாத்மியத்தில் உள்ளது)
ஸுவர்ணபத்மினீ தடாந்ததிவ்ய ஹர்ம்யவாஸினே
ஸுபர்ணவாஹனப்ரியாய ஸூர்யகோடி தேஜஸே!
அபர்ணயா விஹாரிணே பணாதரேந்த்ரதாரிணே
ஸதா நமஶ்ஶிவாய தே ஸதாஶிவாய ஶம்பவே!! (1)
தங்கத்தாமரை நிறைந்த குளத்தின் கரையில் உள்ள ஸர்வோத்தமமான கோயிலில் வஸிப்பவரும், கருடனை வாஹனமாக உடைய மஹாவிஷ்ணுவிடத்தில் ப்ரீதி உள்ளவரும், கோடி சூர்யர்களுடைய தேஜஸ்ஸை உடையவரும், ஸ்ரீ மீனாக்ஷியுடன் விளையாடுகிறவரும், ஸர்ப்ப ராஜனை சிரஸ்ஸில் தரிக்கின்றவரும், மங்களத்துக்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுக்கிறவரும், மங்களமூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரங்கள்.
ஸுதுங்க பங்கஜன் ஹுஜாஸுதாம்ஶுகண்ட மௌலயே
பதங்க பங்கஜா ஸுஹ்ருத்க்ருபீட யோனிசக்ஷுஷே!
புஜங்கராஜ குண்டலாய புண்யஶாலிபந்தவே
ஸதா நமஶ்ஶிவாய தே ஸதாஶிவாய ஶம்பவே!! (2)
மேலிருந்து கீழே வந்த கங்கை, சந்திரகலை இவைகளை சிரஸில் உடையவரும், சூரியன், சந்திரன், அக்நி இவைகளை நேத்திரங்களாக உடையவரும், புண்யம் செய்தவர்களுக்கு பந்துவும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும்,எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்களமூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.
சதுர்முகானனாரவிந்த வேதகீத மூர்த்தயே
சதுர்புஜானுஜாஶரீரஶோபமான மூர்த்தயே
சதுர்விதார்த்ததான ஶௌண்டதாண்டவ ஸ்வரூபிணே
ஸதா நமஶ்ஶிவாய தே ஸதாஶிவாய ஶம்பவே!! (3)
ப்ரம்ஹதேவனின் முகாரவிந்தங்களில் உள்ள வேதங்களினால் துதிக்கப்பட்ட ஸ்வரூபத்தை உடையவரும், மஹாவிஷ்ணுவின் ஸோதரியான பார்வதியால் அலங்கரிக்கப்பட்ட சரீரத்தையுடையவரும் (அர்த்தநாரீஸ்வரரும்) தர்மார்த்த காமமோக்ஷங்களைக் கொடுப்பதில் மிகத்திறமை வாய்ந்த தாண்டவமூர்த்தியும், மங்களத்துக்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்களமூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.
ஶரந்நிஶாகர ப்ரகாஶ மந்தஹாஸ மஞ்ஜுளா-
தரப்ரவால பாஸமான வக்த்ர மண்டலஶ்ரியே!
கரஸ்புரத் கபாலமுக்தவிஷ்ணுரக்த பாயினே
ஸதா நமஶ்ஶிவாய தே ஸதாஶிவாய ஶம்பவே!! (4)
சரத்கால சந்திரிகைபோல் ப்ரகாசிக்கின்ற புன்சிரிப்பினால் அழகான பவழம் போன்ற கீழ் உதட்டோடு ப்ரகாசிக்கின்ற முக மண்டலத்தின் சோபையை உடையவரும், கையில் ப்ரகாசிக்கின்ற கபாலத்தில் விடப்பட்ட விஷ்ணுவின் ரக்தத்தைக் குடிப்பவரும், மங்களத்திற்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்களமூர்த்தியுமான தங்களுக்கும் எப்பொழுதும் நமஸ்காரம்.
ஸஹஸ்ரபுண்டரீக பூஜனைகஶூன்யதர்ஶனா
ஸஹஸ்வநேத்ர கல்பிதார்சனாச்யுதாய பக்தித:
ஸஹஸ்ரபானுமண்டல ப்ரகாஶசக்ரதாயினே
ஸதா நமஶ்ஶிவாய தே ஸதாஶிவாய ஶம்பவே!! (5)
தாமரைப்பூவினால் சிவனுக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும் பொழுது ஒரு புஷ்பம் குறைவதைப் பார்த்து ஸஹியாமல் பக்தியுடன் தன் நேத்ரத்தினால் அர்ச்சனை செய்த மஹாவிஷ்ணுவின் பொருட்டு ஆயிரம் சூர்ய மண்டலம் போல் ப்ரகாசிக்கிற சக்ரத்தைக் கொடுத்தவரும், மங்களத்துக்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்களமூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.
ரஸாரதாய ரம்யபத்ர ப்ருத்ரதாங்க பாணயே
ரஸாதரேந்த்ரசா பஶிஞ்சி நீக்ருதா நிலாஶினே!
ஸ்வஸாரதீக்ருதாஜ நுன்ன வேத ரூபவாஜினே
ஸதா நமஶ்ஶிவாய தே ஸதாஶிவாய ஶம்பவே!! (6)
பூமியைத் தேராக உடையவரும், மஹாவிஷ்ணுவை அழகான அம்பாகவும், மேருவை வில்லாகவும்,ஆதிசேஷனை நாண்கயிறாகவும் உடையவரும், ஸாரதியாகச் செய்யப்பட்ட ப்ரம்ஹதேவனால் ஓட்டப்பட்ட வேதங்களாகிற குதிரைகளை உடையவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்களமூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.
அதிப்ரகல்ப வீரபத்ர ஸிம்ஹநாதகர்ஜித
ஶ்ருதி ப்ரபீத தக்ஷயாக போகி நாகஸத்மனாம்
கதிப்ரதாய கர்ஜிதாகில ப்ரபஞ்சஸாக்ஷிணே
ஸதா நமஶ்ஶிவாய தே ஸதாஶிவாய ஶம்பவே!! (7)
ரொம்பவும் பெரிய சரீரத்துடன் கூடின வீரபத்ரருடைய ஸிம்ஹநாத கர்ஜனையை கேட்டு பயந்த தக்ஷ யாகத்திற்கு வந்த பாதாளவாஸிகள், ஸ்வர்கவாஸிகள் இவர்களுக்கு உயிரை அளித்தவரும், அந்த ஸமயத்தில் சப்தித்த ஸர்வ ப்ரபஞ்சங்களுக்கும் ஸாக்ஷியாய் இருந்தவரும், மங்களத்துக்கு இருப்பிடமானவரும், எப்பொழுதும் மங்களத்தைக் கொடுப்பவரும், மங்களமூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.
ம்ருகண்டு ஸூனுரக்ஷணாவ தூததண்டபாணயே
ஸுகண்ட மண்டலஸ்புரத்ப்ரபா ஜிதாம்ருதாம்ஶவே!
அகண்ட போகஸம்பதார்த்திலோகபாவிதாத்மனே
ஸதா நமஶ்ஶிவாய தே ஸதாஶிவாய ஶம்பவே!! (8)
மார்க்கண்டேயரை ரக்ஷிப்பதற்காக யமனை திரஸ்கரித்தவரும், அழகிய கன்னப்ரதேசத்தில் ப்ரகாசிக்கிற காந்தியினால் ஜயிக்கப்பட்ட சந்திரனை உடையவரும், குறைவற்ற இஹபர ஸுகங்களை விரும்புகிறவர்களால் த்யானிக்கப்படுகிறவரும், மங்களத்தைக் கொடுப்பவரும், மங்கள மூர்த்தியுமான தங்களுக்கு எப்பொழுதும் நமஸ்காரம்.
மதுரிபுவிதிஶக்ர முக்ய தேவைரபி
நியமார்ச்சிதபாதபங்கஜாய!
கனககிரிஶராஸனாய துப்யம்
ரஜதஸபாபதயே நம: ஶிவாய!! (9)
மஹாவிஷ்ணு, ப்ரம்மா, இந்திரன் முதலிய தேவர்களால் விதியுடன் பூஜிக்கப்பட்ட பாதகமலங்களை உடையவரும், மேரு பர்வதத்தை வில்லாக உடையவரும், வெள்ளியம்பலத்திற்குப் பதியும், மங்களமூர்த்தியுமான தங்களுக்கு நமஸ்காரம்.
ஹாலாஸ்யநாதாய மஹேஶ்வராய
ஹாலாஹலாலங்க்ருதகந்தராய!
மீனேக்ஷணாயா: பதயே ஶிவாய
நமோ நம: ஸுந்தரதாண்டவாய!! (10)
ஹாலாஸ்ய க்ஷேத்திரத்திற்கு நாதனும், மஹேஸ்வரனும், ஹாலாஹலம் என்ற காலகூட விஷத்தினால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடையவரும், ஸ்ரீமீனாக்ஷிக்குப் பதியும், அழகிய தாண்டவத்தை உடையவரும், மங்களமூர்த்தியுமான தங்களுக்கு நமஸ்காரம்.
த்வ்யா க்ருதமிதம் ஸ்தோத்ரம் ய: படேத் பக்திஸம்யுத:!
தஸ்யாயுர்தீர்க்கமாரோக்யம் ஸம்பதஶ்ச ததாம்யஹம்!!
