ஸ்ரீ பஞ்ச முக ஹனுமான் மந்திரங்கள்.

239

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

ஸ்ரீ ராம லக்ஷ்மணர்களை அழிக்க ராவணன் செய்ய இருந்த கொடிய யாகத்தை அழிக்கத் தனது சக்தியுடன் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கருடர், ஸ்ரீ வராஹர்,ஸ்ரீ ஹயக்ரீவர்என்ற நான்கு தெய்வ ரூபங்களின் ஆசியையும்,அவர்களின் முகத்தையும் ஒருங்கே பெற்று ஐந்து முகங்களுடன் அவதரித்த வடிவம் தான் ஸ்ரீ பஞ்சமுக ஹனுமன்.

ஸ்ரீ ராகவேந்திரருக்கு இவர் ப்ரத்யக்ஷமாகக் காட்சியளித்துஅருளினார்.

இந்த பஞ்சமுக ஹனுமான்உபாசனை மிக வலிமையானது. விரைவான,நிறைவானபலன்களைத் தரவல்லது .

ஒவ்வொரு முகத்திற்கென்றுதனிப்பட்ட மந்திரங்களும், திசையும்,பலன்களும் உள்ளன.

1.ஹனுமன்முகத்திற்கான மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை – கிழக்கு

பலன் – எதிரிகளின் தொல்லைகள் தீரும்.வழக்குகளில் வெற்றி கிட்டும்.

மூலமந்திரம்:-

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | பூர்வ கபிமுகே |

சகல சத்ரு ஸம்ஹரணாய ஸ்வாஹா ||

2.நரசிம்மர் முகத்திற்கான மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை -தெற்கு

பலன் – பயம்,பேய்,பிசாசு,பில்லி,சூனியம்,ஏவல்,முனி,தோஷங்கள் போக்கும்.

மூலமந்திரம்:-

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | தக்ஷிணமுகே கராளவதனாய | நரஸிம்ஹாய | சகல பூத பிரேத ப்ரதமனாய ஸ்வாஹா ||

3.கருடர் முகத்திற்கான மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை -மேற்கு

பலன் – நோய்கள்,தோல் வியாதி,தீராக் காய்ச்சல்,சர்ப்ப தோஷம்,விஷ ஜந்துக்களால் ஏற்படும் பாதிப்புகளைப் போக்கும்.

மூலமந்திரம்:-

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | பச்சிம முகே கருடாய |சகல விஷஹரணாய ஸ்வாஹா ||

4.வராஹர் முகத்திற்கான மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை – வடக்கு

பலன் – சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

மூலமந்திரம்:-

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | உத்தர முகே ஆதி வராஹாய |சகல சம்பத்கராய ஸ்வாஹா ||

5.ஹயக்ரீவர் முகத்திற்கான மந்திரம்,திசை,பலன்கள் :-

திசை – மேலே பார்த்த படி உள்ள முகம்

பலன் – சகல ஜன வசீகரம்,வாக்குவன்மை,நினைவாற்றல்,வித்தைகளில் சிறந்து விளங்குதல் உண்டாகும்.

மூலமந்திரம்:-

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய | ஊர்த்வ முகே ஹயக்ரீவாய | சகல ஜன வசீகரணாய ஸ்வாஹா ||

ஸ்ரீ ராம சீதா ஜெயம் !