Thursday, October 19, 2023
HomeSlogamஸ்ரீராகவேந்திரர் காயத்ரி மந்திரம்

ஸ்ரீராகவேந்திரர் காயத்ரி மந்திரம்

உங்கள் வாழ்வில், நீங்கள் எதிர்பார்க்காத உன்னதங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் மகான் ராகவேந்திரர். ஸ்ரீராகவேந்திரரை மனதால் நினைத்தாலே போதும்… நம்மையும் நம் சந்ததியும் செழிக்கச் செய்து அருளுவார்.

ஓம் பிரகலநாதாய வித்மஹே
வியாசராஜாய தீமஹி
தந்நோ ஸ்ரீராகவேந்திர ப்ரசோதயாத்

ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அருளிய பிரகலாதன் வழி வந்த மகானே. வியாச ராஜனே. குரு ராகவேந்திர மகானே எங்களுக்கு அருள்புரிவாய் என்று அர்த்தம்.

இந்த ஸ்ரீராகவேந்திரரின் ஸ்லோகத்தை, காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி முதலான இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக்கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியத்தை வழங்குங்கள். ராகவேந்திரரை நினைத்து, ஒருவருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வாழ்வில், நீங்கள் எதிர்பார்க்காத உன்னதங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் மகான் ராகவேந்திரர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =

Most Popular