ஸ்ரீ உமையாம்பிகை ஸ்துதி

132

அலகிலாக் கருணை என்னும் அந்தளிர் ஈன்றது ஒல்லை உலகெலாம் பூத்துக் கங்கை உவட்டெடுத்து ஒழுகும் சென்னனி மலையினில் படர்ந்த பச்சை மரகதக் கொடியை ஞானக் கலையமுது ஒழுகும் சொற்கனியினைக் கருத்துள் வைப்பாம்.
எல்லையில்லா கருணை சுரப்பவளே. ஒளி பொருந்திய உலகத்தை செழிக்கச் செய்பவளே. கங்கையை தாங்கிய கயிலை நாதனைச் சுற்றிப் படர்ந்த பச்சை மரகதக் கொடியே. ஞானக் கலையோடு திகழும் அமுதமே. அருள் சுரக்கும் இனிய சொல்லே. உமையவளே ! உம்மை சிந்தையில் வைத்துப் போற்றுகிறோம்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !