தொழில், வியாபாரத்தில் லாபம் பெருக ஸ்ரீநிவாச பெருமாள் மந்திரம்!
ஸ்ரீநிவாச பெருமாள் மந்திரம்:
ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே
விளக்கம்: திருமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு நமஸ்காரம். மங்களம் அளிப்பவரே, வேண்டிய வரம் வழங்குபவரே, புதையல் போன்றவரே நமஸ்காரம், மகாலட்சுமி குடி கொண்டுள்ள அழகு மார்புடையவரே, வேண்டும் அனைவருக்கும் நன்மைகளை வழங்குபவரே ஸ்ரீநிவாச பெருமாளே நமஸ்காரம்.
தினந்தோறும் காலையில் எழுந்து குளித்து முடித்து இந்த மந்திரத்தை 27 முறை சொல்வதன் மூலம் ஏராளமான நன்மைகள் உண்டாகும். பெருமாளுக்குரிய புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தீபமேற்றி இனிப்புகளை நைவேத்தியம் செய்து, இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை சொல்லி வழிபடுவதால் தொழில் மற்றும் வியாபாரங்களில் லாபம் பெருகும்.
