ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !

357

ஆபதம் அபஹர்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்

(சகல இடையூறுகளையும் நீக்கி எல்லோருக்கும் தனத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஸ்ரீ ராமனை நமஸ்கரிக்கிறேன்.)

ஆர்தானாமார்த்தி ஹன்தாரம் பீதானாம் பீதி நாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்தரம் நமாம்யஹம்

(கஷ்டத்தில் துடிப்போரின் வலியையும், பயத்தையும் நீக்கி, தனது சத்ருவிற்கு யமனாய் விளங்கும் அந்த ராமச்சந்த்ரனை நமஸ்கரிக்கிறேன்.)

ஸன்னத்த கவசிகட்கீ சாப்ப பாணதரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸலக்ஷ்மண:

(கவசம் அணிந்து,வாளும், வில்லும், அம்புடனும் என்னோடு எந்நேரமும் எனக்கு பாதுகாப்பாக கூட வரும் ராமா, லக்ஷ்மணா, என்னை காப்பீராக!)

நம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருத-சராய ச
கண்டீதாகில-தைத்யாய ராமாபாயநிவாரிணே

(அசுரர்களை அடக்கி, என் கஷ்டங்களை எல்லாம் தூர விலக்கும் அந்த கோதண்ட ராமனை நமஸ்கரிக்கிறேன்.)

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய சீதாய: பதயே நம:

(ராமா, ராமபத்ரா, ராமசந்த்ரா, ரகுநாதா, நாதா என்று பலவிதமாய் போற்றி அழைக்கப்படும் அந்த சீதையின் கணவனை நமஸ்கரிக்கிறேன்.)

அக்ரத: ப்ருஷ்டதஸ்சைவ பார்ஸ்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ணபூர்ண-தன்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ

(மஹா வலிமையும் பலமும் கொண்ட ராமன், லக்ஷ்மணன் இருவரும் என்னுடனேயே இருந்து என்னை எல்லா திக்குகளிலும் காப்பீராக!)

ஸ்ரீ ராம ஜெயம் !!!!