ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் !

374

வைதேஹீஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்திதம்|
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜநஸுதே தத்த்வம் முநிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ஶ்யாமளம்||

கல்பதருவின் அடியில் அமைந்த ஸ்வர்ண மண்டபத்தின் நடுவில் மணிமயமான ஆஸனத்தில் வீராஸனமிட்டு ஸீதாதேவியுடன் அழகாக வீற்றிருப்பவரும்,முன்நின்று அனுமன் எழுப்புகின்ற கேள்விகளுக்கு மாமுனிவர்களும் மகிழும் வண்ணம் மேலான தத்துவங்களை விளக்கிக் கூறுபவரும், பரதன் முதலியவர்களால் சூழப்பெற்றவரும், சியாமளவர்ணருமாகிய ஸ்ரீ ராமரைப் போற்றுகின்றேன் !!

ஸ்ரீ சீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமன் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ!