ஸ்ரீ ரங்கநாத அஷ்டகம்

362

ஆனந்தரூபே நிஜபோதரூபே
ப்ரஹ்மஸ்வரூபே ஸ்ருதிமூர்த்திரூபே |
ஸஸாங்கரூபே ரமணீயரூபே
ஸ்ரீரங்கரூபே ரமதாம் மநோ மே || 1 ||

அனந்த ஞானத்தின் சத்திய வடிவம்−
ஆனந்தம் தந்திடும் அத்புத வடிவம்;
ஆழியைக் கரம் கொண்ட அருமறை வடிவம்−
அடியேனென் உளம் கொண்ட, அரங்கனின்
வடிவம்!

காவேரிதீரே கருணாவிலோலே
மந்தாரமூலே த்ருதசாரகேலே |
தைத்யாந்தகாலேऽகிலலோகலீலே
ஸ்ரீரங்கலீலே ரவதாம் மநோ மே || 2 ||

காவிரி தீரத்தே, கருணையைப் பொழியும்−
கண்ணனின் லீலையில் விரியுமே விழியும்!
பாவியாம் அரக்கரின் ஆவியை முடித்து,
பாலித்த அரங்கனை, மனமிது விழையும்!

லக்ஷ்மீநிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்பவாஸே |
க்ருபாநிவாஸே குணவ்ருந்தவாஸே
ஸ்ரீரங்க வாஸே ரவதாம் மநோ மே. || 3 ||

அகிலத்தின் ரக்ஷகன், அலர்மகள் ரமணன்!
அருணனில் ஒளிர்பவன், அகத்திலும் ஒளிர்பவன்!
சகல குணத்தொடு கருணையில் அணைப்பவன்,
சீலத்தால் அரங்கன், சிறை பிடித்தனனே!

ப்ரஹ்மாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே |
வ்யாஸாதி வந்த்யே ஸநகாதி வந்த்யே
ஸ்ரீரங்க வந்த்யே ரமதாம் மநோ மே || 4 ||

அரனும் வணங்க, அகிலமும் வணங்க,
அரியொடு அமரரும் சேர்ந்தே வணங்க,
அருந்தவ முனிவர்கள் அவன் தாள் வணங்க,
அடியனும் அரங்கனின் அடி நயந்தேனே!

ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே வைகுண்ட்டராஜே ஸுரராஜராஜே |
த்ரைலோக்யராஜேऽகிலலோகராஜே ஸ்ரீரங்கராஜே ரமதாம் மநோ மே || 5 ||

அரனுக்கு ஈசன், அந்த கருடனுக்கீசன்;
அமரரிறை ஈசன், அத்திவத்துக்கும் ஈசன்!
அண்டசராசரமும், அம்மூன்றுலகும்,
ஆளும் அவ்வரங்கனில், அகம் இழந்தேனே!

அமோகமுத்ரே பரிபூர்ணநித்ரே
ஸ்ரீயோகநித்ரே ஸஸமுத்ரநித்ரே |
ச்ரிதைகபத்ரே ஜகதேகநித்ரே
ஸ்ரீரங்கபத்ரே ரமதாம் மநோ மே || 6 ||

அரிதுயில் காணிணும், அபயமே அளிப்பான்;
அலையுடை பாற்கடல், யோகு போல் அயர்வான்!
அடைக்கலம் வேண்டிட அருள் கொடுக்கும் அவன்,
அண்டத்தின் ஆதாரம், அவ்வரங்கனில் தொலைந்தேனே!

ஸசித்ரஸாயீ புஜகேந்த்ரஸாயீ
நந்தாங்கஸாயீ கமலாங்கஸாயீ |
க்ஷீராப்திஸாயீ வடபத்ரஸாயீ
ஸ்ரீரங்கஸாயீ ரமதாம் மநோ மே || 7 ||

அரவணைத் துயில்வான்; ஆலிலைத் துயில்வான்;
அத்தன், அலர்மகள், அவர்மடி விழைவான்;
அதிசய வடிவினில், பாற்கடல் படுப்பான்;−
அரங்க இறை அவன், அடியனை ஆண்டனே!

இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புநர்நசாங்கம் யதி சாங்கமேதி |
பாணௌ ரதாங்கம் சரணேம் புஜாங்கம்
யாநே விஹங்கம் ஸயனே புஜங்கம் || 8 ||

ஆகா, அரங்கம் இதற்கீடுண்டோ?
போகும் உயிரிங்கு, புவி திரும்புதலில்லை!
வாகாய் பிறவியும் வருமென்றாலும்
தோதாய் தேகம், தேவனுரு ஏற்குமே!

ரங்கநாதாஷ்டகம் புண்யம்
ப்ராதருத்தாய ய: படேத் |
ஸர்வாந் காமா நவாப்நோதி ரங்கஸாயுஜ்யமாப்நுயாத் || 9 ||

அரங்கனின் தோத்திரமிதை,
அனுதினமும் படிப்பவர்தாம்−
இச்சைகள் நிறைவேறி,
எம்பிரானை, திண்ணம் அடைவரே!!