சுக்கிரன் சன்னிதியில் கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபட்டு வருவது நல்லது.

84

தமிழ் ஆண்டாக இருந்தாலும், ஆங்கில ஆண்டாக இருந்தாலும் ஆண்டின் முதல் நாள் எந்தக் கிழமையில் பிறக்கின்றதோ, அந்தக் கிழமைக்குரிய கிரகத்தின் சன்னிதியில் பாடல் பாடி வழிபட்டால், ஆண்டு முழுவதும் வேண்டிய நற்பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் இந்தப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை பிறப்பதால் சுக்கிரன் சன்னிதியில் கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபட்டு வருவது நல்லது.

அள்ளிக் கொடுத்து ஆதரிக்கின்ற
வெள்ளிச் சுக்ர வேந்தே சரணம்!
மலர் வெண்தாமரை வைரமாம் ரத்னம்
நிலத்தில் தந்தால் நின்னருள் கிட்டும்!
மொச்சை தான்யம் முகமலர்ந் தளித்தால்
இச்சைகள் அனைத்தும் இனிதே தீர்ப்பாய்!
திருமண யோகம் சிறப்புடன் வழங்கும்
அருமைச் சுக்ரா அழைத்தோம் வருக!