தங்கம் வாங்கும் யோகம் கிடைக்க ஒரு மண்டலம் வரை சொல்ல வேண்டிய மந்திரம்!
தங்கத்திற்கு ஆசை இல்லாதவர் யார் இருக்கா? குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீது நாட்டம் அதிகம். ஆனால், எல்லோராலேயும் தங்கம் வாங்க முடியுமா? என்று கேட்டால் முடியாது தான். ஆனால், ஆசை மட்டும் இருந்து கொண்டே இருக்கும். இவ்வளவு ஏன், எனக்கு கூட தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் என்ன கையில் காசு, பணம் தான் இல்லை. சரி, தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசை இருப்பவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் இந்த மந்திரத்தை சொல்லி வர கண்டிப்பாக தங்கம் வாங்கும் யோகம் அமையும்.
சுவர்ண கணபதியின் திருவுருவப்படத்தை வீட்டில் வாங்கி வைத்து வழக்கம் போல் பூஜை செய்ய வேண்டும். அப்படி வாங்க முடியாதவர்கள் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்யலாம்.
தங்கம் வாங்கும் யோகம் அமைய சொல்ல வேண்டிய மந்திரம்:
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா!
ஒவ்வொரு நாளும் 11 முறை பூஜையின் போது இந்த சுவர்ண கணபதியின் மூல மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மண்டலம், அதாவது 48 நாட்கள் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருப்பதோடு, தங்கம் வாங்க வேண்டும் என்ற குறிக்கோளும் இருக்க வேண்டும். இதன் மூலம் கூடிய விரைவில் தங்கம் கைக்கு வந்து சேரும்.
