“இன்னம்பூர்” எனும் சிவத்தலம். இத்தலத்து இறைவர் அகத்தியருக்கு இலக்கண உபதேசம் செய்தருளினார்.
ஆதலால் இறைவர் “எழுத்தறிநாதர்” என்று போற்றப்படுகிறார்.
திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய பதிகங்கள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றைப் பாராயணம் செய்யும் பிள்ளைகளுக்குச் சிவபெருமானாருடைய திருவருள் முன்னின்று, கல்வியில் முதன்மை பெறச் செய்யும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
பதிக பாராயணம் செய்யும் முறை:-
மாணவர்கள் காலை, மாலை என இருவேளைகளிலும் மனம் ஒன்றி திருஇன்னம்பர் தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு எழுத்தறிநாதர் சுவாமியை நினைத்து இப்பதிகத்தை பாராயணம் செய்து வருதல் வேண்டும்.
திருஞானசம்பந்தர் அருளிய மூன்றாவது தமிழ் வேதம்
திருச்சிற்றம்பலம்
(1) எண்திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய.. வண்டிசைக்கும் சடையிரே..
வண்டிசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார்.. தொண்டிசைக்கும் தொழி லோரே.
(2) யாழ்நரம்பின் இசை இன்னம்பர் மெவிய.. தாழ்தரு சடைமுடி இரே.. தாழ்தரு சடைமுடி யீர் உமைச் சார்பவர்.. – ஆழ்துயர் அருவினை இலரே.
(3) இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய.. வளமதி வளர்சடை யிரே..
வளமதி வளர்சடை யீர்உமை வாழ்த்துவார் உளமதி மிகஉடை யோரே.
(4) இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய.. கடிகமழ் சடைமுடி யீரே.. கடிகமழ் சடைமுடி யீர்…
உம கழல்தொழும் அடியவர் அருவினை இலரே.
(5) இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய.. உமையொரு கூறுடை யீரே..
உமையொரு கூறுடை யீர் உமை உள்குவார் அமைகிலர் ஆகிலர் அன்பே.
(6) எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய.. தண்ணரும் சடைமுடி யீரே..
தண்ணரும் சடைமுடி யீர் உமைச் சார்பவர் விண்ணவர் அடைவுடை யோரே.
(7) எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய நிழல்திகழ் மேனியி னீரே.. நிழல்திகழ் மேனியி னீர் உமை நினைபவர் குழறிய கொடுவினை இலரே.
(8) எத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய.. தூர்த்தனைத் தொலைவு செய் தீரே.. தூர்த்தனைத் தொலைவு செய்தீர் உமைத் தொழுபவர் கூர்த்த நற்குணமுடை யோரே.
(9) இயல் உளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய.. அயனும் மால் அறிவரி யீரே..
அயனும் மால் அறிவரி யீர் உமது அடிதொழும் இயல்உளார் மறுபிறப்பு இலரே.
(10) ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய.. தேரமண் சிதைவுசெய் தீரே..
தேரமண் சிதைவு செய்தீர் உமைச் சேர்பவர் ஆர்துயர் அருவினை யிலரே.
(11) ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை.. நாடமர் ஞானசம் பந்தன்..
நாடமர் ஞானசம்பந்தன் நற்றமிழ் பாடவல் லார் பழி இலரே.
திருச்சிற்றம்பலம்
