Friday, October 20, 2023
HomeSlogamதிருவோணம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

திருவோணம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து திருவோணம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம:
சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம:
சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

பொருள்: சுவர்க்கத்துக்குத் தலைவரும், விஷ்ணுவால் போற்றப்பட்டவரும், ஒழுக்கமுள்ள பக்தர்களின் இதயக்குகையில் சஞ்சரிப்பவரும், தானே பிரம்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவரும், புலன்களை அடக்கியவரும், பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரும், உலகத்தை ஜெயிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

Most Popular