Saturday, October 28, 2023
HomeSlogamதிருப்பதி மலையேறும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

திருப்பதி மலையேறும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

திருப்பதி மலையேறும் போது சொல்ல வேண்டிய மந்திரம்!

மந்திரம்:

ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித

ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸே வந்தே ச்ரத்தயாஸஹ

தம் பவந்தம் அஹம் பத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம

க்ஷமஸ்வ ததகம் மேஸ்த்ய தயயா பாபசேதஸ

த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்சயஸ்வமே

ஏழுமலையானை தரிசிக்க செல்லும் போது திருப்பதி மலை ஏறிக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு ஏறினால், ஏழுமலையானின் தரிசனம் கிடைக்கும். அதோடு, அவரது பரிபூரண அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொருள்:

அனைத்து தேவர்களாலும் வணங்கப்பட்ட தும், புண்ணியங்கள் பல கொண்ட வேங்கட மலையே, எனது பாதங்களை உங்களது மீது வைத்து நான் ஏறுகிறேன். அப்படி ஏறும் போது தெரிந்தும், தெரியாமலும் ஏற்படும் பாவங்களை கருணையோடு பொறுத்துக் கொள்ளுமாறு நான் வேண்டுகிறேன். ஏழுமலையானை தரிசிக்கவே நான் செல்கிறேன். அவரது தரிசனம் கிடைக்க தாங்கள் அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + fifteen =

Most Popular