Tuesday, October 24, 2023
HomeSlogamஉண்ணாமுலையாம் உமையோடு மேவு திரு அண்ணாமலை வாழ் அருட்சுடரே

உண்ணாமுலையாம் உமையோடு மேவு திரு அண்ணாமலை வாழ் அருட்சுடரே

 

அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை
விஞ்செழுத்தாய் ஒன்றாய் விளங்குமலை – நெஞ்சகத்தே
வைத்தமலை நாயேனைத் தன்அடியார் கூட்டத்தில்
வைத்தமலை அண்ணாமலை…

உண்ணாமுலையாள் ஒருபாக மானமலை
கண்ணார் அமுதாய காட்சிமலை – விண்ணோர்
துதிக்குமலை அன்பர் தொழுதேத்தி நாளும்
மதிக்குமலை அண்ணாமலை.

கண்டங்கரியமலை கண்மூன்றுடையமலை
அண்டரெலாம் போற்றுதற்கு அரியமலை – தொண்டருக்குத்
தோற்றுமலை நாளும் தொழுவோர் எழுபிறப்பை
மாற்றுமலை அண்ணாமலை…
குருநமசிவாயர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =

Most Popular