ஆடும் அயில்வேல் அரசே
வந்தருள் செய் வடிவேலவா …🦚🦚
வளர்பிறை சஷ்டி திதியான இன்று
முருகப்பெருமானை வணங்கி அவனருள் பெறுவோம்…
ஸ்ரீ வடிவேலழகனின் ஆயிரம் திருநாமங்கள் ….(41-50)
ஓம் அத்புதாய நமஹ.
உலகிற்கே ஒரு தனி ஆச்சரியமாய் இருப்பவருக்கு நமஸ்காரம்.
ஓம் அபீஷ்டதாயகாய நமஹ.
அடியவர்களுக்கு விரும்பிய பொருளை கொடுப்பவருக்கு நமஸ்காரம்.
ஓம் அதீந்த்ரியாய நமஹ.
ஐம்புலன்களுக்கும் எட்டாதவருக்கு நமஸ்காரம்.
ஓம் அப்ரமேயாத்மனே நமஹ.
ப்ரமாணங்களால் அறியமுடியாத ஆத்ம ஸ்வரூபத்தை உடையவருக்கு நமஸ்காரம்.
ஓம் அத்ருச்யாய நமஹ.
பக்தி இல்லாதவர்களால் பார்க்க முடியாதவருக்கு நமஸ்காரம்.
ஓம் அவ்யக்தலக்ஷணாய நமஹ.
யாவராலும் நன்கு அறியமுடியாத லக்ஷணத்தை உடையவருக்கு நமஸ்காரம்.
ஓம் ஆபத்வினாசகாய நமஹ.
பக்தர்களுக்கு ஏற்படும் துன்பத்தை நாசம் செய்பவருக்கு நமஸ்காரம்.
ஓம் ஆர்யாய நமஹ.
யாவராலும் பூஜிக்கத்தகுந்தவருக்கு நமஸ்காரம்.
ஓம் ஆட்யாய நமஹ.
நிறைந்த செல்வம் உள்ளவருக்கு நமஸ்காரம்.
ஓம் ஆகமஸம்ஸ்துதாய நமஹ.
வேதங்களால் புகழப் பெற்றவருக்கு நமஸ்காரம்.
முருகனைப் பற்றி புகழாத புராணங்களில்லை,கவிகள் இல்லை.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
வீரவேல் முருகனுக்கு அரோகரா !!
