வியாபாரம் முதல் திருமணம் வரை தடை விலக்கும் வெட்டு மந்திரம்!
நாம் செய்யும் காரியங்கள் தடையில்லாமல் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் தான் இது. வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும், வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும், காரிய வெற்றிக்கு முயற்சிக்கும் முறை தான் இது. முதலில் விநாயகர் வெட்டு மந்திரம் சொல்லி தேங்காய் உடைத்து அதன் பிறகு மற்ற வெட்டு மந்திரங்கள் சொல்ல வேண்டும்.
விநாயகர் வெட்டு மந்திரம்:
ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை சங்ஙரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கள்களையும் சங்ஙரி சங்ஙரி சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு அறு சுவாகா.
மூல மந்திரம்:
ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம.
தேங்காய் வெட்ட….
தேங்காய்க்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து அதில் கற்பூரம் ஏற்றி வைத்து 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து வெட்ட வேண்டும். அது ஒரே வெட்டாக இருக்க வேண்டும். அப்போது தேங்காய் 2 பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விலகியது என்று அர்த்தம், ஒரு பக்கம் சாய்ந்து நின்றாலும் அல்லது இரண்டும் சாய்ந்தாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விலகும் வரை தேங்காய் வெட்ட வேண்டும்.
