Sunday, October 15, 2023
HomeSlogamவிளக்கு பூஜை செய்ய 108 போற்றிகள்!

விளக்கு பூஜை செய்ய 108 போற்றிகள்!

விளக்கு பூஜை செய்ய 108 போற்றிகள்!

1. பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
2. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
3. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
4. மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
5. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
6. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
7. ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
8. பிறர் வயமாகாப் பெரியோய் போற்றி
9. பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
10. பேரருள் கடலாம் பொருளே போற்றி
11. முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
12. மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி
13. அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
14. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
15. ஓமெனும் பொருளாய் உள்ளோய் போற்றி
16. இருள்கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
17. மங்கள நாயகி மாமணி போற்றி
18. வளமை நல்கும் வல்லியே போற்றி
19. அறம்வளர் நாயகி அம்மையே போற்றி
20. மின்னொளி அம்மையாம் விளக்கே போற்றி
21. மண்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
22. தையல்நாயகித் தாயே போற்றி
23. தொண்டர்கள் அகத்தமர் தூமணி போற்றி
24. முக்கண் சுடரின் முதல்வி போற்றி
25. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
26. சூளாமணியே சுடரொளி போற்றி
27. இருளொழித்து இன்பமும் ஈவோய் போற்றி
28. அருள்மொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
29. அறிவினிக்கு அறிவாய் ஆனாய் போற்றி
30. இல்லக விளக்காம் இறைவி போற்றி
31. சுடரே விளக்காம் தூயோய் போற்றி
32. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
33. எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
34. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
35. அருமறை பொருளாம் ஆதி போற்றி
36. தூண்டுசுடர் அனைய ஜோதி போற்றி
37. ஜோதியே போற்றி சுடரே போற்றி
38. ஓதும் உள்ளொளி விளக்கே போற்றி
39. இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
40. சொல்லாக விளக்காம் ஜோதி போற்றி
41. பலர்காண் பல்லக விளக்கே போற்றி
42. நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
43. உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
44. உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
45. உடம்பெனும் மனையாக விளக்கே போற்றி
46. உள்ளத்தகழி விளக்கே போற்றி
47. மடம்படு உணர்நெய் விளக்கே போற்றி
48. உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
49. இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
50. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
51. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
52. அளவில்லா அளவுமாகும் விளக்கே போற்றி
53. ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
54. தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
55. கற்பனை கடந்த ஜோதி போற்றி
56. கருணை உருவாம் விளக்கே போற்றி
57. அற்புதக் கோல விளக்கே போற்றி
58. அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
59. சிற்பர வ்யோம விளக்கே போற்றி
60. பொற்புடன் நடம்செய் விளக்கே போற்றி
61. உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
62. கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
63. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
64. பெருக அருள் சுரக்கும் பெரும போற்றி
65. இருள்சேர் இருவினை எரிவாய் போற்றி
66. அருவே உருவே அருவுருவே போற்றி
67. நந்தா விளக்கே நாயகி போற்றி
68. செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
69. தீப மங்கள ஜோதி போற்றி .
70. மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
71. பாகம் பிரியா பராபரை போற்றி
72. ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
73. ஏகமுகம் நடம்செய் எம்மான் போற்றி
74. ஊழிஊழி உள்ளோய் போற்றி
75. ஆழியான் காணா அடியோய் போற்றி
76. ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
77. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
78. முந்தை வினையை முடிப்போய் போற்றி
79. பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி
80. தன்னருள் சுரக்கும் தாயே போற்றி
81. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
82. இருநில மக்கள் இறைவி போற்றி
83. குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
84. ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
85. தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி
86. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
87. எத்திக்கும் துதி ஏய்ந்தாய் போற்றி
88. அஞ்சேல் என்றருளும் அன்பே போற்றி
89. தஞ்சம் என்றவரை சார்வோய் போற்றி
90. ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
91. ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
92. எல்லா உலகமும் ஆனாய் போற்றி
93. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
94. புகழ்சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
95. செல்வாய் செல்வம் தருவாய் போற்றி
96. பூங்கழல் விளக்கே போற்றி
97. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
98. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
99. செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
100. நல்லன்பு ஒழுக்கம் நல்குக போற்றி
101. விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
102. நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
103. தாயே நின்னருள் தந்தாய் போற்றி
104. தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
105. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
106. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
107. போற்றிஎன் அன்பொளி விளக்கே போற்றி
108. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =

Most Popular