ஸ்ரீ ‘ஏகதந்தன்’ ஸ்ரீ விநாயகப்பெருமானை பணிந்து நம் பணிகள் தொடங்குவோம்

416

மேருமலையில் முன்னர் ‘வியாசர்’ விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு ‘ஏகதந்தன்’ (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.அந்த ஸ்ரீ ‘ஏகதந்தன்’ ஸ்ரீ விநாயகப்பெருமானை பணிந்து நம் பணிகள் தொடங்குவோம் ஸ்ரீ மகா கணபதியே துணை ஸ்ரீ மந்திரமூர்த்தி விநாயகர் போற்றி

ஸ்ரீ மகா கணபதியே துணை

கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்

விரும்பு மவல்பலவும் மேன்மே – லருந்திக்

குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.

கணபதியே யிக்கதைக்குக் காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி

வருமரன்றா னீன்றருளு மைந்தா – முருகனுக்கு

முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்

என்கதைக்கு நீயென்றுங் காப்பு.விநாயகர் துதி

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்

பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்

காதலாற் கூப்புவர்தங் கை.ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்

வெற்றி புனைந்த விழிமூன்றும் – பெற்றதொரு

தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்

கொண்டக்கால் வராது கூற்று.சப்பாணி

எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்

வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்

வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்

கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி

அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே

எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்

குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே

ஸ்ரீ மகா கணபதியே துணை ஸ்ரீ மந்திரமூர்த்தி விநாயகர் போற்றி ஸ்ரீ மகா கணபதியே துணை