Saturday, October 14, 2023
HomeSlogamசனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

சனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

சனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான் ஆவார். எனவே, சனியைப் போல் கொடுப்பவருமில்லை; சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்போம் . ஆகவே, சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் சனியின் பாதிப்புக் குறைய பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறில் அருள்பாளிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம்.

இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று, எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.

சனி பகவானின் கருணை கிடைக்க என்ன செய்யலாம்:
உங்களுக்கு ஏழரை சனியா? அஷ்டம சனியா? இந்த மத்திரத்தை சொல்லுங்க. சனி பகவானின் கருணை உங்களுக்கு கிடைக்க, சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசை அல்லது சனி அந்தர் தசையின் போது: சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி அனுமன் சாலிசா அல்லது அனுமான் ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

சனி பகவானின் மூல மந்திர ஜபம்:
“ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ”,
இந்த ஸ்லோகத்தை – 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

சனி ஸ்தோத்திரம்:

நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!

தமிழில்:

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

சனி தாக்கம் குறைய தானம் செய்ய வேண்டியது:
சனிக்கிழமையன்று நம்மால் முடிந்தால், நன்கொடையாக ஒரு எருமை மாடு அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.

பரிகாரம்:

சனி பகவானின் நோன்பு நாள்: சனிக்கிழமை.
செய்ய வேண்டிய பூஜை: அனுமான் பூஜை.
ருத்ராட்சம்: 14 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

சனி பகவானின் காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

Most Popular