Saturday, October 14, 2023
HomeAalayangalகோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 அபூர்வ சிவத்தலங்களின் தரிசனம்!

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 அபூர்வ சிவத்தலங்களின் தரிசனம்!

படத்தில் இடம் பெற்று உள்ள சிவலிங்க திருமேனி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி கோயில் அருகே காஞ்சி பெரியவா உதாரளவுப்படி சங்கரமடத்தில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன . இதேபோன்று பார்லிVaidyanathMandir at Parli, MH. , இடத்திலும் லிங்க திருமேனி சிதைந்த நிலையில் உள்ளதாம் ! தரிசிப்போம் .

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள 108 அபூர்வ சிவத்தலங்களின் தரிசனம்!

காஞ்சிபுரத்தை கோயில் நகரமாக்கிய 108 சிவத்தலங்களின் தரிசனம்!

`நகரேஷு காஞ்சி’ என்பது கவி காளிதாசனின் வாக்கு. `முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் காஞ்சி’ என்பது ஶ்ரீவேதாந்த தேசிகரின் புகழுரை. தொன்று தொட்டு இன்று வரை கல்வி, கலை, புராணம், வரலாறு, ஆன்மிகம் என்று எல்லாத் துறைகளிலும் புகழ் குன்றாமல் சிறப்புற்றுத் திகழும் நகரம் காஞ்சி.

`கல்வியில் சிறந்த நகரம்’ என்றும் காஞ்சிக்குச் சிறப்புண்டு. நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு இணையான பல காஞ்சிக் கடிகைகள் (கலாசாலைகள்) இந்த நகரத்தில் சிறப்புற்று விளங்கியதை வரலாறு விவரித்திருக்கிறது. நாளந்தா பல்கலைக்கழகத் தலைவரான தர்மபாலர், பௌத்த மதத்தில் விஞ்ஞானப் பிரிவை ஏற்படுத்திய திக்நாகர், சீனர்கள் வணங்கும் போதிதர்மர் ஆகியோர் காஞ்சிக் கடிகைகளில் பயின்றவர்கள்தாம்.

காஞ்சியின் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாக இருப்பது, `கோயில்களின் நகரம்’ என்ற பெருமைதான். காணும் திசையெங்கும் விண்முட்டும் கோபுரங்கள். எந்தத் தெருவில் நின்றாலும் அங்கிருந்து ஒரு மந்திர ஒலி நம் மனதை மயக்கும்.

காஞ்சிபுரம் என்றால் ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில், கைலாசநாதர் கோயில்கள்தாம் நம் நினைவுக்கு வரும். ஆனால், இந்தக் கோயில் நகரம் 108 சிவாலயங்களை தன்னுள்ளே அடக்கி வைத்திருப்பது பலர் அறியாதது. காஞ்சிபுரத்தைச் சூழ்ந்து இந்த 108 சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு சிவாலயத்துக்கும் ஒரு புராணச் சிறப்பு, வரலாற்றுப் பெருமை உண்டு.

திருமால், `அனந்த பத்மநாமம்’ என்ற பெயரில் சிவபெருமானை வணங்கித் தனது சாபம் நீங்கப்பெற்ற தலம், லிங்கையப்பர் தெருவில் வீடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. அடர்ந்து காணப்படும் கான்கிரீட் வீடுகளைக் கடந்து சென்றால் மட்டுமே அனந்த பத்மநாம ஈஸ்வரரைத் தரிசிக்க முடியும்.

அரிசி ஆலைக்குக் குழி தோண்டும்போது கிடைத்த 16 பட்டைகளைக் கொண்ட பழைமையான சிவலிங்கம் இப்போது சுக்லேசுவரராக அருள் புரிகிறார். கிருஷ்ணர் வழிபட்ட கிருஷ்ணேஸ்வரர்; காமன் வழிபட்ட காமேஸ்வரர்; பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோரின் கர்வத்தை அடக்கிய மகாலிங்கேஸ்வரர் என்று சிறப்பு மிக்க பல சிவத்தலங்கள் நம் பார்வை படாமல் காங்கிரீட் காடுகளுக்கு மத்தியில் மறைந்து கிடக்கின்றன.

காஞ்சியில் இருக்கும் 108 சிவாலயங்களில் பெரும்பாலானவற்றை மகாசிவராத்திரி அன்று மட்டுமே அடையாளம் காணமுடியும். நெருக்கடியான, அடையாளம் கண்டறிய முடியாத இடங்களில் இந்தக் கோயில்கள் இருக்கின்றன. சில கோயில்கள் மடங்களின் நிர்வாகத்திலும் சில கோயில்கள் தனி நபர்களின் நிர்வாகத்திலும் இருக்கின்றன.

காஞ்சி மா நகரின் அடித்தளங்களாக இருக்கும் இந்த 108 திருச் சிவத் தலங்களையும் தரிசிப்பவர்கள் நிச்சயம், அழுத்தமான ஆன்மிக அனுபவத்தை உணர்வார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =

Most Popular