தேவகோட்டை கோட்டையம்மன் கோயில்!
காவல் தெய்வமாக தேவி அமர்ந்த கோட்டை என்பதால் இவ்வூர் தேவி கோட்டை என்றும் தேவ கோட்டை என்றும் அழைக்கப்பட்டது என்கிறார்கள். ஆடி மாதம் அம்மனுக்கே உள்ள பிரத்யேக மாதம் என்றாலும் தேவகோட்டையில் உள்ள கோட்டையம்மன் ஆடித் திருவிழா மிகப் பிரமாண்டமாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.திருவிழாவின் போதுதான் அம்மனைத் தரிசிக்கலாம்.
அதுவரை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பீடத்திற்குத்தான் வழிபாடு எல்லாமே. வருடம் முழுமைக்கும் நீரில் இருக்கும் அம்மனை ஊரணியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்கிறார்கள். அதன் பின் தினம் ஒரு அலங்காரத்தில் ஜொலிக்கிறாள் கோட்டை அம்மன். செவ்வாய் அன்றும் மேடையில் உள்ள பீடத்துக்குத்தான் அபிஷேகம் ஆராதனை எல்லாம். பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மனுக்கும் ஆராதனை அர்ச்சனை உண்டு. இது பதினைந்து நாள் திருவிழா.
ஸ்ரீ கோட்டை அம்மன் கோவில், தேவகோட்டை.
இந்தக் கோயிலும் தேவகோட்டை நகரத்தார்களின் 40 பிரிவுகளைச் சேர்ந்த 130 புளிகளுக்குச் சொந்தமானது, இதில் 5 அறங்காவலர்கள் 2 வருட காலம் உள்ளனர்.
அம்மனுக்குக் கழுத்துரு (கழுத்திரு) சார்த்துதல் = (திருமாங்கல்யம் அணிவித்தல்) என்றொரு வேண்டுதலும் சிறப்பாக நடைபெறுகிறது. சொல்லிக் கொண்டவர்கள் அதை அலுவலகத்தில் பணம் செலுத்திப் பெற்று அம்மனுக்கு சார்த்தி ஆராதிக்கிறார்கள்.
கோட்டை அம்மன் கோயில் மேடை மிக விசேஷம்! தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் கர்ப்பகிருகத்தில் மேடை மட்டுமே எப்போதும் இருக்கும் சக்தி மிக்க அம்மன். இந்த திருவிழாவின் போது தான் அம்மன் ஊருக்குள் பிரவேசித்து 15 நாட்கள் தங்கி இருப்பார்கள்.
தேவகோட்டையின் காவல் தெய்வம் இந்த அம்மன் தான். சக்தி மிக்க அம்மன்.இந்த திருவிழாவின் போது தான் அம்மன் ஊருக்குள் பிரவேசித்து 15 நாட்கள் தங்கி இருப்பார்கள். கர்ப்பகிருகத்தில் மேடை மட்டுமே எப்போதும் இருக்கும். இச்சமயம் தான் ஆற்றில் இருந்து குடத்தில் நீர் எடுத்து, ஆற்றங்கரைக் கோவிலில் கொண்டு வைத்து தென்னம் பாளையை அதில் வைத்து அம்மனை ஆவாகனம் செய்து இங்கு கொண்டு வந்து வைப்பார்கள்.அம்மனுக்கு நேரில் வெளியில் அமைந்திருக்கும் மேடைக்கு பால் ,மஞ்சள்,குங்குமம் மற்றும் பல்வேறு மங்கல பொருட்கள் அபிஷேகம் நடை பெறுகிறது.
ஊரின் வெளியே அம்மனின் பழங்கால கோவில் இருக்கிறது. இது ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்து இருக்கிறது.ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு அலங்காரம். நினைத்ததை முடித்துக் கொடுக்கும் அம்மன் இவள். இங்கு வீடு,விமானம், கால்,கை,கண்மலர்,உடம்பு,பாம்பு, என நிறைய விதமான பொருட்கள் அர்ச்சனை டிக்கட் கொடுக்கும் இடத்தில் கிடைக்கும்.
இதற்கு பணம் கட்டி வாங்க, ஒரு தட்டில் வைத்து கொடுப்பார்கள் (இது விலைக்கு அல்ல) அதை பெற்றுக் கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்யும் போது இதை அவர் சாமியிடம் வைத்து பூசை பண்ணிக் கொடுப்பார்கள். நம் வேண்டுதலுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் வைத்து வழி பட அடுத்த ஆண்டுக்குள் அது கண்டிப்பாக நிறைவடையும். மீண்டும் அப்பொருளை திருப்பி வாங்கிய இடத்தில் கொடுத்து விட வேண்டும்.
வேறு மதத்தினரும் இந்த அம்மனை நாடி வருகிறார்கள். ஊரின் காவல் தெய்வம் என்பதாலும், அவர்களின் விருப்பம் நிறை வேறுகிறது என்பதாலும், அம்மனின் சக்தியை உணர்ந்ததாலும் ஒற்றுமையாக ஊர் மக்கள் வழிபடுகிறார்கள். புதிதாகத் திருமணம் ஆன தம்பதியினர் கட்டாயம் கலந்துகொள்வார்கள்.
சம்பந்தப்பட்ட சம்பந்தப்புரங்களின் வீடுகளில் உறவினர்களையும் சம்பந்தப்புரங்களையும் வீட்டுக்கு வரச்சொல்லி வடிப்பார்கள் . . இங்கே பொங்கலும் மாவிளக்கும் வைக்கும் பெண்டிர் கூட்டம் அதிகமாக இருந்தது. கோயிலைச் சுற்றி எங்கெங்கும் பொங்கல் & மாவிளக்கு வைப்பவர்கள்தான். மாவிளக்கு என்றால் ஒன்று இரண்டல்ல பதினாறு மாவிளக்குக் கூட ஒரே குடும்பத்தார் போடுகிறார்கள்.
தேவகோட்டை நகரத்தார்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஆண்டுதோறும் இவ்விழாவில் கலந்துகொள்வது வழக்கம். அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது, நோய்கள், சொத்துக்கள் வாங்குதல், வெளிநாடுகளுக்கு விசா பெறுதல், வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை, போன்ற அனைத்திற்கும் மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
முன்பொரு முறை உறவினர் ஒருவர் சொன்னார்., கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு அவர் மகள் விரதமிருந்து திருவிழா சமயத்தில் கும்பிடு கரணம் போடுவார் என்று. (கும்பிடு கரணம் = கும்பிட்டு எழுந்து, எழுந்த இடத்தில் இருந்து பிரகாரம் முழுமைக்கும் திரும்பக் கும்பிட்டு எழுதல்). இங்கே இந்து மதத்தவர் மட்டுமல்ல மற்ற மதத்தினரும் திருவிழா முடியும் வரை அசைவம் சமைப்பதில்லை. இந்து மதத்தினர் சமையலில் கடுகுகூட தாளிப்பதில்லை.
காப்புக் கட்டும் அன்று இங்கே இருந்தால் காப்பு அவிழ்க்கும் அன்றும் இங்கே இருக்கவேண்டும் என்பது நியதி (காப்புக் கட்டுதல் = திருவிழா ஆரம்ப தினத்தன்று கோயிலில் நடைபெறும். காப்பு அவிழ்த்தல் என்பது திருவிழா முடிவு அன்று நடைபெறும்). 15 நாட்களுக்கு மக்கள் உணவுப் பொருட்களை வறுக்க மாட்டார்கள், இது அம்மனின் வெப்பத்தை அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது. விழா முடிந்ததும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோயில் குளத்தில் மூழ்கி உஷ்ணத்தைக் குறைக்கும். விழா நாட்களில் ஆட்டிறைச்சி கடைகள் எதுவும் விற்பனைக்கு திறக்கப்படாது என தெரியவந்துள்ளது.
கோயிலைச் சுற்றிலும் கூட்டம் கூட்டம். கடைகள், வண்டிகள் வாகனங்கள். அனைத்தையும் தாண்டி நீந்திச் சென்றால் அம்மன் கோயிலைத் தரிசிக்க முடியும். அங்கே க்யூவில் மனிதர்கள். கழுத்திரு, புடவை சார்த்தும் இடத்திலும் ஆண்களுக்கே அனுமதி. அம்மனை அருகிருந்து தரிசிக்கும் வாய்ப்பு.
மிகச் சக்தி வாய்ந்த பீடம். காணும்போதே புல்லரித்தது. சக்தியின் பேராற்றல் எங்கும் பரவி இருந்தது. தினம் ஆராதிக்கப்படும் சக்தி பீடத்தைத் தொட்டு வணங்க ஆளாளுக்குப் போட்டி . ஆனால் தொடக்கூடாது என்று அங்கே ஒருவர் சொல்லி விலக்கிக் கொண்டே இருந்தார்.
பூவலங்காரத்தில் ஜொலித்த கோட்டை அம்மனையும் பீடத்தையும் கண்டு வணங்கி நெகிழ்ந்து வழிபட்டு வெளியில் வந்தால் லேசான தூறலோடு மழை ஆரம்பித்துவிட்டது. பேரெழில் பேராற்றலோடு அவள் பொழிய நான் வழி தவறி (உறவினர் ஒருவர் கொடுத்த பிரசாத உணவுப் பார்சல்களோடு) ஒரு குடிசையோரம் ஒதுங்க அது தேன் சிந்துதே வானம் என்று அங்கங்கே என்னை நனைத்தது. ஒரு நிமிடத்துக்குள் பத்துப் பேர் அந்தத் திண்ணையில் ஏறி பேச்சற்று நிற்க, கிட்டத்தட்ட 30 மாடுகள் மழைக்காக என்னைச் சுற்றி ஒதுங்க திகில் பட எஃபக்டோடு ஓட்டுநரிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு கார் நிற்குமிடம் அறிந்து ஆட்டோக்களைச் சுற்றி அங்குமிங்கும் ஓடி காரைக் கண்டுபிடித்து குளிரக் குளிர நனைந்தபடி அமர்ந்தேன்!
வானமே பூவாய்க் கொட்ட மல்லிகைப்பூப்பந்தலுக்குள் இருந்தவள் மழைப் பூப்பந்தலுக்குள் எங்களை அனுப்பி இருந்தாள். மழை பெய்வது சுபசகுனம் என்று என்னைக் கோயிலுக்கு அழைத்துச் சென்ற பெற்றவர்கள் கூறினார்கள்.
புகைப்படம் எடுத்த கைபேசியின் ஸ்க்ரீன் 19:00 லேயே நிற்க காரோட்டியும் திருவிழாவில் முன்பொருமுறை வேறொரு கோயிலில் கருவறை அம்மனைப் படம் பிடித்ததனால் சில பேருடைய செல்ஃபோனே ரிப்பேராகி விட்ட கதையைச் சொல்லியபடி வந்தார். அம்மா உன் புகழை எழுதத்தானே எடுத்தேன் என்று நினைத்தபடி வீட்டுக்கு வந்தால் பொறியாளர் மகன் அதை சரி செய்து கொடுத்துவிட்டார்.
இந்த ஊரில் பல்லாண்டுகளாக கந்தர் சஷ்டி விழாவும் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. கோட்டை அம்மன் விழா நடக்கும் 8 நாட்களும் தேவகோட்டை நகருக்குள் கோழி ஆடு இறைச்சி கடைகள் அனைத்தும் மூடி இருக்கும்
பொதுவாக அம்மன் கோவில்களில் கோழி, ஆடு பலிகொடுத்து வழி படுவர். ஆனால் தேவகோட்டை கோட்டை அம்மன் வழிபாடு மிக வித்தியாசமானது.
யாரும் எந்த பலியும் கொடுப்பதில்லை அதுமட்டுமல்ல, விழா நடக்கும் எட்டு நாட்களும் தேவகோட்டை நகருக்குள் கோழி ஆடு இறைச்சி கடைகள் அனைத்தும் மூடி இருக்கும் தேவகோட்டை எல்லையான ஆற்றுப்பாலம் தாண்டியே இறைச்சி கடைகள் இருக்கும். எட்டு நாட்களிலும் அனைத்து இறைச்சிக் கடைகளும் நகருக்குள் மூடியிருக்கும் என்பது மிகவும் வித்தியாசமானது. வேறு எந்த ஊரிலும் இது போன்ற ஒரு நிகழ்வது இல்லை என நான் கருதுகிறேன்.
எனவே கோட்டயம்மனை பக்தர்கள் மட்டுமல்ல ஊர் மக்கள் அனைவரும் வழி பட்டு வருவதுபோல் ஆகும். இறைச்சிக் கடை வைத்திருப்பவர்கள் பலர் வேறு மதத்தினராக இருந்தாலும் அனைவரும் இந்த மரபினைக் கடைப்பிடித்து வருவது என்பது பாராட்டுக்குரியது. தேவகோட்டை மாநகரில் கோட்டை அம்மன் கோவில் ஆடித்திருவிழா வருடா வருடம் விமரிசையாக நடைபெறும்.
அம்மனுக்கு காப்பு கட்டும் அன்று ஊரின் எல்லைக்குள் இருப்பவர்கள் திருவிழா முடியும் வரை எல்லைதாண்டக் கூடாது என்பது ஐதீகம். ஆகையால் காப்பு கட்டும் போது வெளியூர் போக வேண்டியவர்கள் அச்சமயம் பக்கத்து ஊரான காரைக்குடிக்கு சென்று வருவார்கள். காரைக்குடியிலிருந்து தேவகோட்டை 20 கிமீ தொலைவில் உள்ளது. ஊரணி தெருவில் கோயில் உள்ளது. தேவகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோக்கள் உள்ளன.
இது ஊருக்குள் அமைந்த கோவில். நாட்டுக் கோட்டை செட்டியார்களின் பராமரிப்பில் உள்ளது. ஊரின் வெளியே அம்மனின் பழங்கால கோவில் இருக்கிறது. இது ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்து இருக்கிறது. தேவகோட்டையின் காவல் தெய்வம் இந்த அம்மன் தான். சக்தி மிக்க அம்மன். இந்த திருவிழாவின் போது தான் அம்மன் ஊருக்குள் பிரவேசித்து 15 நாட்கள் தங்கி இருப்பார்கள்.
கர்ப்பகிருகத்தில் மேடை மட்டுமே எப்போதும் இருக்கும். இச்சமயம் தான் ஆற்றில் இருந்து குடத்தில் நீர் எடுத்து, ஆற்றங்கரைக் கோவிலில் கொண்டு வைத்து தென்னம் பாளையை அதில் வைத்து அம்மனை ஆவாகனம் செய்து இங்கு கொண்டு வந்து வைப்பார்கள். அதில் தான் அம்மனின் அலங்காரத்தை நீங்கள் காண்கிறீர்கள். அம்மனுக்கு நேரில் வெளியில் அமைந்திருக்கும் மோடைக்கு (மேடை) பால் அபிஷேகம் நடை பெறுகிறது.
ஒவ்வொரு நாளும் ஓவ்வொரு அலங்காரம். நினைத்ததை முடித்துக் கொடுக்கும் அம்மன் இவள். இங்கு வீடு, விமானம், கால், கை, கண்மலர், உடம்பு, பாம்பு என நிறைய விதமான பொருட்கள் அர்ச்சனை டிக்கட் கொடுக்கும் இடத்தில் கிடைக்கும். இதற்கு பணம் கட்டி வாங்க, ஒரு தட்டில் வைத்து கொடுப்பார்கள் (இது விலைக்கு அல்ல) அதை பெற்றுக் கொண்டு போய் அர்ச்சகரிடம் கொடுத்து அர்ச்சனை செய்யும் போது இதை அவர் சாமியிடம் வைத்து பூசை பண்ணிக் கொடுப்பார்கள். நம் வேண்டுதலுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் வைத்து வழி பட அடுத்த ஆண்டுக்குள் அது கண்டிப்பாக நிறைவடையும்.
மீண்டும் அப்பொருளை திருப்பி வாங்கிய இடத்தில் கொடுத்து விட வேண்டும்.
அம்மனுக்கு பொங்கல் வைக்கிறார்கள். காய்கறி அலங்காரத்தில் அம்மன். அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் வேறு மதத்தினரும் இந்த அம்மனை நாடி வருகிறார்கள். ஊரின் காவல் தெய்வம் என்பதலும், அவர்களின் விருப்பம் நிறை வேறுகிறது என்பதாலும், அம்மனின் சக்தியை உணர்ந்ததாலும் ஒற்றுமையாக ஊர் மக்கள் வழிபடுகிறார்கள்.
