Sunday, October 15, 2023
HomeAalayangalகொல்லாபுரியம்மன் கோயில்!

கொல்லாபுரியம்மன் கோயில்!

திருட்டு போன பொருட்கள் மீட்டுத் தரும் கொல்லாபுரியம்மன் கோயில்!

திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இருமத்தூரில் அமைந்துள்ள கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.

திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலின் தெற்கு பகுதியில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின்_ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டி கொள்ளும் பக்தர்கள் கோழிகளை உயிருடன் கயிற்றில் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டு விடுகிறார்கள்.

இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இவ்வாறு திருட்டு போன பொருட்கள் கிடைத்தால் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடுகளை வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

வாகனங்களில் செல்லும்போது கொல்லாபுரி அம்மன் கோவிலில் வழிபட்டால் வாகன விபத்துகள் ஏற்படாது என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து விதமான வாகனங்களையும் கோவில் வளாகத்தின் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜை நடத்திவிட்டு செல்லும் வழக்கம் உள்ளது.

இந்தக் கோயிலானது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலில் கொல்லாபுரியம்மன் சன்னதியும், விநாயகர், நவக்கிரகங்கள் உபா சன்னதிகளும் உள்ளன. இந்தக் கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கொல்லாபுரியம்மன் கோயிலில் 3 கால பூஜைகள் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு, ஆங்கில வருடப் பிறப்பு, பொங்கல், தீபாவளி ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

திருட்டுப் போன உங்களது பொருட்கள் திரும்ப கிடைக்க இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. கோயிலுக்கு அருகில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் இந்த புளியமரத்தின் கிளையில் உயிருடன் உள்ள கோழிகளின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தொங்க விட்டு விடுகிறார்கள். அப்படி கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

Most Popular