Friday, October 27, 2023
HomeAalayangalசனீஸ்வரனின் ஜென்ம பகைவன்

சனீஸ்வரனின் ஜென்ம பகைவன்

சனிஸ்வர பகவான்

நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவர் ஒருவரே

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார்.

சனிஸ்வர பகவான் கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது.

சனி பகவானைப் போல் கெடுப்பவரும் இல்லை.. கொடுப்பவரும் இல்லைஎன்ற சான்றோர் வாக்கை சரியாக புரிந்து கொண்டவர்கள் எவரும் அச்சம் கொள்ள மாட்டார்கள்.

தனக்கு சிவபெருமான் இட்டக் கட்டளையின்படி, தன்னுடைய பணியை நீதிநிலை தவறாமல் வழங்கி வருபவர்தான் சனி பகவான்.

சாயாபுத்ரன்சாயையின் மகன் (சாயபுத்ரா)

இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக / மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. எனவே மந்தன் எனும் பெயர் பெற்றார்.

சாயாபுத்ரன்
மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்..

சூரியனுக்கு் உஷாதேவி மனைவி. எமன், யமுனை வைவஸ்தமனு
என மூன்று குழந்தைகள் பிறந்தன.

 உஷாதேவி விஸ்வகர்மா மகளாவாள்.

உஷாதேவிக்கு சிவன் என்றால் உயிர். சிவனை காட்டிற்குள் போய் தவம் செய்ய விரும்பி தன் நிழலுக்கு உயிர் கொடுத்து வீட்டில் இருக்கச் செய்துவிட்டு தவம் செய்ய கிளம்பினாள்.

அவளின் ( நிழலின்) பெயர் சாயாதேவி.

சாயாதேவிக்கு
தப்தி (பத்திரை), சாவர்ணிக மனு, சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள்

சூரியனுக்கும் அவளுக்கும் பிறந்தவா்களில் ஒருவா் சிருதகர்மா எனும் சனீஸ்வரர்.

சூர்ய பகவான்
ஒரு நாள் பழைய நினைவுகளை பற்றி பேசும் போது சாயாதேவி
புரியாது பேச
சூரியன் நீ யார் என்று கேட்டு கடும் கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டிவிட்டாா்.

அதற்குள் சூரியன் சாயாதேவி சண்டை பற்றி சிவன் உஷாதேவியிடம் சொல்லிவிடுகிறார்.

உஷாதேவி சூரியனிடம் நடந்ததை சொல்லி சமாதானம் செய்வித்தாா்.

சனீஸ்வரர் தாயை திட்டியது பொறுக்காமல் வீட்டை விட்டு வெளியேறி உங்களை விட பெரிய ஆளாக வந்து காட்டுகிறேன்
என்று சூரியனிடம் சொல்கிறார்.

சனீஸ்வரர் பிறந்ததில் இருந்தே அவர் கண்களால் யாரை பாா்கிறாரோ அவர்களுக்கு கெட்டது நடக்கும்
ஆகையால் அவரது தாயாா் அவரை தனி அறையில் வைத்து வளர்க்கிறாா்.

சாயாதேவி அவளுக்கு தெரிந்த கதைகளை சொல்லிக்கொடுத்து வளர்த்தாள்.

 சனீஸ்வரர் அம்மா பிள்ளை.

சூரியனை விட பெரிய கிரகப்பதவி வேண்டும் என்று காசிக்கு சென்று சிவனை நினைத்து கடும் தவம் செய்தார்

சிவன் பைரவராக வந்து அவருக்கு ஆசானாய் தகப்பனாய் இருந்து அனைத்து கலைகளையும், வேதங்களையும்
கற்று கிரகப்பதவி கொடுத்தார்.

முதலில் அவர் வேலை முன் ஜென்ம பாவங்களுக்கும், அவரின் கிரகத்தின் பார்வை வரும் வரை செய்த பாவங்களுக்கும் தண்டனை மட்டும் தர வேண்டிய வேலை தரப்பட்டது.

யாரும் அவரை மதிக்கவில்லை. மற்ற கிரகங்களை வணங்கியவா்கள் சனீஸ்வரை வணங்காமல் சென்றனர்.

தன்னை யாரும் மதிக்கவில்லை என்ற கோபத்தோடு திருகொள்ளிகாடு வந்து கடும் தவம் செய்தார்.

இவரது தவத்தால் வந்த வெப்பம் சுற்றி இருந்த காடுகளை எரித்தது.
சிவனும், பாா்வதிதேவியும் வந்து அவரை சாந்தப்படுத்தி இன்று முதல் இந்த பூமி உன்னுடையது என்று கூறி சிவனின் தலையில் இருந்த கீரிடத்தை எடுத்து சனீஸ்வரர் தலையில் வைத்து ஈஸ்வர பட்டம் அளித்தார்.

நீ கொடுக்க நினைப்பதை யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம் அதனை யாரும் என்றும் அழிக்க முடியாது என்று வரம் பெற்றார்.

திருகொள்ளிகாடு திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கூட்டுரோடு என்ற இடத்தில் இருந்து 10 கி. மீ தொலைவில் உள்ளது.

இந்த கோவிலில் மட்டும் சனீஸ்வரர் எதிரில் நின்று அவரை பாா்த்தவண்ணம் தரிசிக்கலாம்.

பைரவாின் கண்ணும் சனீஸ்வரர் கண்ணும் நேருக்கு நேர் பாா்த்தவண்ணம் எதிரெதிரே நின்றவண்ணம் அருள்பாலிக்கின்றனா்.
அருகிலேயே ஸ்ரீ மகாலெட்சுமி தாயார் தனி சன்னதியில் இருக்கிறார்.

திருவானைக்கோவில்

திருவானைகோவிலில் சனீஸ்வரர் அவரது தாய் சாயாதேவியோடு அருள்பாலிக்கிறார்.
மனைவி நீலாதேவியுடன்
மகன்கள் மாந்தி, குந்தனுடன்

திருநரையூர்

நாச்சியார் கோவில் அருகே உள்ள திருநரையூரில் தசரதனுக்கு அருள் கொடுத்தவண்ணம் குடும்பத்துடன் காக வாகனம் கொண்டு தனி இரும்பு கொடி மரம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

குச்சனூர்

தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.

திருநள்ளாறு

திருநள்ளாறு கோவிலில்
சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருபாலிக்கிறார்.
நவகிரக கோவில்களில் ஒன்றிது.

திருநள்ளாறு கோவில் கோபுரத்திற்கும் சனி கிரகத்திற்கும் இடையே நீல வண்ண ஒளிகதிா் எப்போதும் பாய்ந்து கொண்டு உள்ளது.

செயற்கைக்கைகோள் ஒவ்வொரு முறையும் நீல வண்ண ஒளிக் கதிரை கடக்கும் போது அது அதன் வேகத்தையும் செயல்பாட்டையும் சிறிது நேரம் இழக்கிறது.

பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது.

பார்வதியின் ஆசை

பார்வதிக்கு பூமியில் பொிய மாளிகை கட்ட ஆசை
சிவனிடம் கேட்டவுடன் நாமோ சனீஸ்வரரை அதிபதியாக்கிவிட்டோம்
நான் போய் அவரிடம் சொல்லிவிட்டு
வந்தவுடன் கட்டிடம் கட்டலாம் என்று சொல்லி உடுக்கை ஒலி கேட்டால் அனுமதி இல்லை என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டாா்.

தேவதச்சனுடன் பார்வதி கயிலையில் காத்து இருக்க சனீஸ்வரரை சிவன் சந்தித்து மாளிகை கட்ட அனுமதி கேட்கிறார்

சனீஸ்வரரோ பதறிப்போய் சிவனின் காலில் விழுந்து சிவனே என்று கால்தொட்டு கும்பிட்டு நான் உங்கள் சிவ தாண்டவத்தை கண்டதே இல்லை எல்லோரும் உள்ள சபையில் என் கண்ணை கட்டிவிடுகிறாா்கள் நீங்களோ தனியாக வந்துள்ளீா்கள் எனக்காக ஒரே ஒரு முறை ஆடிக்காட்டுங்கள் என்று கேட்க
சிவனும் அழகாக ஆக்ரோசமாக சிவதாண்டவம் ஆடினார்.

சிவதாண்டவம் ஆடும்போது உடுக்கை தானாக வேகமாக அடிக்க பாா்வதிதேவி கோபித்துக்கொண்டு தேவதச்சனுடன்
புறப்பட்டார்.

மாளிகை கட்டும் ஆசை இப்படி ஆகிவிட்டதே என்று கோபமாக இருந்தவரை சமாதானபடுத்தி நடந்ததை சொல்கிறார் சிவன்.

மறு முறை போய் கட்டிக்கொள்ளலாம்
தேவதச்சனை அழைக்கிறேன் என்று சொன்னதற்கு வேண்டாம் இனி எனக்கு பூமியில் மாளிகை கட்டும் ஆசையில்லை என்று சொல்லிவிடுகிறார்.

பொதுவாக தந்தைக்கும் மகனுக்கும் ஒற்றுமை இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஜென்ம பகைவர்கள் ஆவார்கள்.

ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடம் தங்கும் கிரகம் சனியாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.

சனியின் ஆட்சி வீடு மகரம், கும்பம். உச்ச வீடு துலாம்.

நீச வீடு மேஷம். பகை வீடு சிம்மம்.

சனிக்கு நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன், ராகு, கேது, சமகிரகம் குரு.
பகை கிரகம் சூரியன், சந்திரன்,

செவ்வாய். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு சனி அதிபதியாவார்.

சனி திசை 19 வருடங்களாகும். சனி ஆண்கிரகமும் இல்லாமல் பெண் கிரகமாகாவும் இல்லாமல் அலியாக இருக்கிறார்.

சனிஸ்வர பகவானின் வாகனம் காக்கை, எருமை. பாஷை அன்னிய பாஷைகள், உலோகம் இரும்பு, வஸ்திரம் கறுப்பு பூ போட்டது,
அண்டங்காகம் இவரது வாகனம்.
நிறம் கருமை,
திசை மேற்கு,
தேவதை யமன், சாஸ்தா,
சமித்து வன்னி,
தானியம் எள்ளு,
புஷ்பம் கருங்குவளை,
சுவை கசப்பு ஆகும்.

சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர்.

சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம்.

முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம்.

சனி பகவானை நேருக்குநேர் வணங்காமல் பக்கவாட்டில் நின்றவாறு வணங்க வேண்டும்.

கருத்த உடலைக் கொண்ட இவர், துணிவு மிகுந்தவர். நீல நிற உடை, நீல மலர் மாலை, நீல மணி ஆகியவற்றை தரித்தவர்.

மகர, கும்ப ராசிகளுக்கு அதிபதி.

எள் கலந்து உணவும், நல்லெண்ணெய் தீபமும் இவரது விருப்பமாகும்.

இவர் வழங்கும் பலன்களைப் பார்த்து பலரும் இவரை, ‘கெடுதல் தரும் கிரகம்என்றும் குறிப்பிடுவதுண்டு.

ஆனால் உண்மையில், முற்பிறவியில் ஒருவர் செய்த நன்மை, தீமைகளுக்குத் தகுந்தாற்போலவே, சனி பகவான் தன்னுடைய பலன்களை வழங்கி வருகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்து, சுப கிரக சேர்க்கை அல்லது பார்வையைப் பெற்று, சுய ஆதிபத்தியம் அடைந்து, சுப வீடுகளில் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்வில் இமாலய வளர்ச்சியை அடைவார்.

சனி பகவான் மேற்கு திசைக்குரியவர்.

பாவக் கிரக வரிசையில் முக்கிய இடம் இவருக்கு உண்டு. நால்வகை உபாயங்களில், பேத உபாயத்திற்கு உரியவர்.

ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களை வழிபடும் பொழுது, சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சாலச் சிறந்தது.

சனி பகவான் கிரகஸ்துதி

நீலாஞ்சன ஸமா பாஸம் ரவி புத்ரம், யமா க்ரஜம் ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்

சனி காயத்ரி மந்திரம்

ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + eight =

Most Popular