எதிர்மறை ஆற்றலும், தோஷமும் நம்மை தாக்காமல் இருக்க இந்த 1 பொருள் போதுமே!

353

நம் வீட்டிற்குள் வருபவர்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் என்று சொல்லி விட முடியாது. அதாவது, நம் வீட்டிற்கு வருபவர்களை பற்றி தவறாக சொல்லவில்லை. யார் மனதையும் புண்படுத்துவதற்காகவும் சொல்லவில்லை. இருந்தாலும், ஒரு பெண் தன்னுடைய மாதவிடாய் நாட்களில் மற்றவர் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது நல்லது. இதேபோல் சுத்த பத்தமாக, இல்லாத சமயங்களில் நாமே அடுத்தவர்களின் வீட்டுக்கு செல்வதை தவிர்த்து விட வேண்டும். நம் வீட்டில் ஏதாவது தீட்டு இருந்தால், அடுத்தவர்களையும் நம் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லி விடுவது உத்தமம்.

இப்படிப்பட்ட சில சாஸ்திரங்கள் எல்லாம் சில பேருக்கு தெரியும். சில பேருக்கு தெரிந்திருக்காது. நம்மை அடுத்தவர்கள் குறை கூறும் அளவிற்கு நாம் எப்போதும் நடந்து கொள்ளக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதன் அடிப்படையில், நம் வீட்டிற்கு தீட்டு உள்ளவர்கள் யாரேனும் வந்தாலும், அந்த தோஷமானது நம்மை தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக நம் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் செய்து வைத்திருக்கும் அந்த சமயத்தில், தீட்டு உள்ளவர்கள் நம் வீட்டிற்கு வந்தால், அப்போது அந்த தோஷம் நம்மை தாக்காமல் இருக்க என்ன செய்யலாம்? என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக நாம் எந்த ஒரு பெரிய பரிகாரத்தையும் செய்ய தேவையில்லை. ஒரு சிறிய கிண்ணத்தில், சிறிதளவு வெந்தயத்தை போட்டு உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்து விட்டாலே போதும். அதாவது நீங்கள் பூஜை செய்த குறிப்பிட்ட அந்த நாளில் உங்கள் வீட்டிற்கு வருபவர்கள், எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி. அந்த தோஷம் உங்களை தாக்காமல், அந்த எதிர்மறை ஆற்றல்களை எல்லாம், நீங்கள் வைத்திருக்கும் வெந்தயம் ஈர்த்துக் கொள்ளும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நீங்கள் செய்த பூஜைக்கான பலனையும் நீங்கள் முழுமையாகப் பெற முடியும். ‘யாராவது நம்ம வீட்டுக்கு வந்துட்டா நம்ம செய்யுற பூஜை புனஸ்காரங்கள் கெட்டுப்போய்விடும் என்பது அர்த்தமில்லை’. எதிர்பாராமல் ஏதேனும் தீட்டு உள்ளவர்கள் வந்துவிட்டால்! நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோல் நம் வீட்டு சமையலறையில் வைத்திருக்கும் பொருட்களையும், எந்தவிதமான தோஷமும் தாக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நம் வீட்டில் இருப்பவர்கள் தீட்டாக இருந்தாங்களே, நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் குறிப்பிட்ட சில பொருட்களை தொடக்கூடாது என்று சொல்வார்கள். அப்படி இருக்க வெளியாட்கள் தீட்டாக இருக்கும் சமயத்தில் நம் சமையலறை வரை வந்து விட்டால்! அது கட்டாயம் தோஷமாகும்.

இதனால் உங்கள் வீட்டு சமையலறையில் உப்பு ஜாடிக்கு பக்கத்திலோ அல்லது அஞ்சறைப் பெட்டிக்கு பக்கத்திலோ ஒரு சிறிய கிண்ணத்தில் வெந்தயத்தை போட்டு வைக்க வேண்டும். உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வெந்தயத்தை வைத்தாலும், முக்கியமாக அந்த வெந்தயத்தை எதைக் கொண்டும் மூடி வைக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. திறந்த படி தான் வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை அந்த வெந்தயத்தை, எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய வெந்தயத்தை வைத்து கொள்ளலாம்.

எப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்தாலும், எப்படிப்பட்ட தீட்டு உள்ளவர்கள், உங்கள் வீட்டிற்குள் வந்தாலும் அதனுடைய தாக்கம் உங்களை வந்து சேராது. பூஜை செய்யக் கூடிய நாட்களில் மட்டும்தான் வெந்தயத்தை கிண்ணத்தில் வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒரு சிறிய பௌலில், ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு திறந்தபடி அப்படியே வைத்து விடுங்கள் அவ்வளவுதான். எப்போதுமே அது வீட்டில் திறந்த நிலையில் இருப்பது மிகவும் நல்லது. எந்த ஒரு தோஷமும் உங்களை தாக்காமல், எல்லா எதிர்மறை ஆற்றலையும், தோஷங்களையும், அந்த வெந்தயமே ஈர்த்துக் கொள்ளும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.