யானைக்கு மோட்சமும் , சிலந்திக்கு மறுபிறவியும் தந்த திருவானைக்காவல் ஸ்தலம்!

73

யானைக்கு மோட்சமும் , சிலந்திக்கு மறுபிறவியும் தந்த திருவானைக்காவல் ஸ்தலம்!

புட்ப நந்தன், மாலியவான் இருவரும் சிவகணங்கள். சாபத்தின் காரணமாக பூமியில் ஒரே இடத்தில் பிறப்பெடுத்தனர். ஒருவர் யானையாக, மற்றொருவர் சிலந்தியாகப் பிறந்தனர். அங்கு வெண்நாவல் மரம் ஒன்றின் அடியில், ஒரு சிவலிங்கம் இருந்தது. யானை முன்நினைவுப் பயனாய் அருகில் உள்ள சந்திர தீர்த்தத்திலிருந்து, நீர்எடுத்து வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தது.

யானைக்கு மோட்சமும், சிலந்திக்கு மறுபிறவியும்:

அதே மரத்திலிருந்து சிலந்தி சிவ லிங்கமேனியில் காய்ந்த இலை, சருகுகள் விழுவது கண்டு மனம் பொறுக்காது லிங்க மேனியைக் காக்க அதை சுற்றி வலை பின்னி வைப்பதும் வாடிக்கையானது. ஒருநாள், யானையின் பொறுமை எல்லை கடந்தது, ஒரு சிலந்தியின் எச்சில் எவ்வாறு லிங்கம் மீது படலாம் என சினம் கொண்டு வலையை கிழித்தெறிந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிலந்தி, கோபத்தின் எல்லைக்கே சென்று, யானையின் தும்பிக்கையின் உட்புறம் சென்று கடித்துக்குதறிவிட ,வலி தாங்காது யானை தனது தும்பிக்கையை தரையில் அடிக்க, இருவருமே மரணம் அடைந்தனர்.

இருவருமே சிவன் பால் அன்பும், பக்தியும் கொண்டு பிழை செய்தவர்கள் என்பதால், யானைக்கு மோட்சம் தந்து சிவகணங்களின் தலைமைப் பொறுப்பாளர் ஆக்கினார் சிவன். அந்த தலம் யானையால் காக்கப் பட்டுப் புனிதமடைந்ததால் அது ”திருவானைக்காவல்” என அழைக்கப்படட்டும் என்று அருளி, சிலந்திக்கு மனிதப் பிறப்பெடுத்து தம் அடியார்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து பின் தம்மிடம் ஐக்கியமாக ஆசீர்வதித்தார். அதன்படி சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசர், பிள்ளை வரம் வேண்டிய சுபதேவருக்கு, சிலந்தியை மகனாகப் பிறவி எடுக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவன்.

அரசரின் மனைவி கர்ப்பவதி ஆனதும், ஜோசியர்கள் இன்னும் சிறிது நேரம் கழித்து குழந்தை பிறந்தால் அவனை உலகமே கொண்டாடும் எனக்கூற, அரசியார் தன்னை, அந்த நேரம் வரும்வரை தலைகீழாகத் கட்டி தொங்கவிட ஆணையிட, அதன்படி செய்யப்பட்டு, நல்ல சுப வேளையில், நடராஜப் பெருமானின் ஆசியுடன் ஆண் மகன் பிறந்தது‌. அதற்கு செங்கண்ணன் என்று பெயர் சூட்டினர்.

ஜம்புகேஸ்வரர் ஸமேத அகிலாண்டேஸ்வரி அம்பாள்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், பட்டத்தரசனாகும் போது கோச்செங்கட்சோழன் எனும் பெயர் கொண்டு,பூர்வ ஜென்ம நினைவுகளால் உந்தப்பட்டு திருவானைக்காவல் ஷேத்திரத்தை பூஜித்து வந்தார்.யானை நுழைய முடியாத அளவுக்கு குறுகிய படிக்கட்டுகளையும்,தட்டு மலைமீது சிவலிங்கத்தை யும் ஸ்தாபித்தார். எழுபது தலங்களில் இதுபோன்ற அமைப்பில் ஆலயங்கள் கட்ட ,அவைகள் ”மாடக் கோவில்கள் ”என அழைக்கப்பட்டன.இதில் முதற் கோவில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வர் ஆலயமே.

இவ்வாலயத்தில், சித்தருக்கு பிரும்ம தீர்த்தக் கரையில் சன்னதி உள்ளது. ஒன்பது துளைகள் கொண்ட கல்சன்னல் வழியாகவே இறைவனை தரிசனம் செய்ய நவ தீர்த்தங்களில் நீராடிய பயனும் கிடைக்கும். இச்சந்நதியில் எப்போதும் நீர்க்கசிவு இருக்கும். அதுவே இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு ஆகும்.