260 கோடி வயது திருவண்ணாமலை ஆர்க்கேயனர் காலத்தியது என்கிறார்கள் அதாவது இந்த காலம்200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த காலத்திலேயே தோன்றிவிட்டது என்கிறார்கள் ஆராட்சியாளர்கள்
திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்
இது உலகிலேயே மிக பழமையான மலை என்று டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்
முதல் கணக்கெடுப்பின்படி மலையின் உயரம் 2665 அடி
திருவண்ணாமலையில் மாதம்தோரும் பவுர்ணமி அன்று கிரிவலம் வருகிரார்கள் ஆனால் ஐப்பசி. கார்த்திகை. மார்கழி மாதங்கள் மிகவும் சிறந்த மாதங்கள் என்கின்றனர் பெரியோர்கள் எந்த மாதம் வந்தால் என்ன மனம் அண்ணாமலையாரிடம் இருக்கவேண்டும் என்கின்றனர் மூத்த பக்தர்கள்
தீப தரிசன மண்டபம்:
அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது
மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை1202 ல் எழுப்பினார் இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வார்கள் இங்குதான் தீபம் ஏற்றும் முன் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர்
கரும்புத்தொட்டில்:
அண்ணாமலையாரின் முக்கிய நேர்த்தி கடன்களில் ஒன்று கரும்புத்தொட்டில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால் அந்த குழந்தையை கரும்புத்தொட்டில் இட்டு கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள் இவ்வாறு செய்தால் மேலும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெருவார்கள் என்பது ஐதீகம்
ஆறுவிரல் ஆறுமுகம்:
திருவண்ணாமலை திருப்புகழ் பாவலர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறு விரல் இருந்தது அவர் ஆறுமுக பக்தர் என்பதால் அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தார் போலும். அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார் அந்த நடை மயில் போல இருக்குமாம் முருகனின் வாகனத்தை இது நினைவு படுத்துகிறது
கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாலும்:
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லதென்பார்கள் சித்த வைத்தியத்தில்
இதை அழுத்தம் திருத்தமாக இப்பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்து சொல்வதற்காக பொன்னாங்கண்ணியை புளி போட்டு கடைந்தாள் உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா என்கிறார்கள் இப்படி சொன்னால் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று சொல்லி சாப்பிடுவார்களாம்
மீனின் பெயர் செல்லாக்காசு:
திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர் இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து இதில் இருக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு அடேங்கப்பா இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால் இது அக்காலத்து மீன் சாமி அபூர்வ இனம் சாமி என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது
தங்கமலை ரகசியம்:
அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?
கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கைலாயம் சிறப்பு ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது இதை சிவலிஙாகமா கருதி சித்தர்கள். முனிவர்கள். ஞானிகள் எல்லோரும் வழிபட்டுள்ளனர்
உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூருகின்றது
கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும்
திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்
துவாபரயுகத்தில் தங்க மலையாகவும்
இன்றைய கலியுகத்தில் கல் மலையாகவும் விளங்குகிறது
கிரிவலம் செய்யும் முறை:
திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்
கிரிவலம் செல்லும்போது எங்காவது தொடங்கி எங்காவது முடிக்க கூடாது மலையைச்சுற்றி14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்லவேண்டும் வாகனங்களில் செல்லக்கூடாது
கிரிவலப்பாதையில் எட்டு திசைகளிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது
இந்திர லிங்கம்
அக்னி லிங்கம்
எம லிங்கம்
நிருதி லிங்கம்
வருண லிங்கம்
வாயு லிங்கம்
குபேர லிங்கம்
ஈசான லிங்கம்
ஆகிய எட்டு லிங்கத்தை வணங்கி செல்லவேண்டும் மலையை ஒட்டிய பக்கம் செல்லாமல் இடது பக்கமாகவே செல்லவேண்டும்
இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடியே நடக்கவேண்டும் மலையைப்பார்த்து கை கூப்பி வணங்க வேண்டும்
தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்
நந்திக்கு பெருமை:
மாட்டுப்பொங்கல் அன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும் அனைத்து காய்கறிகள் பழங்கள் இனிப்பு வகைகள் பலகாரங்கள் நைவேத்தியம் செய்து கதம்ப மாலை அணிவித்து பூஜை செய்வார்கள் அவ்வேளையில் அண்ணாமலையார் நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்ச்சி தருவார் தனது வாகனமான நந்தியை பெருமைபடுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்
அண்ணாமலை பொருள்:
அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள் அண்ணா என்றால் நெருங்கவே முடியாது என்பதாகும்
பிரம்மணாலும் விஷ்ணுவாலும்
அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது
செந்தூர் விநாயகர்:
ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம் ஆனால் திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகின்றனர்
சம்பந்தாசுரன் என்னும் அசுரனை விநாயகர் வதம் செய்த போது அவனது உதிரத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர் எனவே விநாயகர் அவனது உதிரத்தை தனது உடலில் பூசிக்கொண்டார் இதன் அடிப்படையில் சித்திரை பிறப்பு விநாயகர் சதுர்த்தி திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஒர் நாள் என ஆண்டிற்கு நான்கு நாள் மட்டுமே இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ
