Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalதொலைந்த பொருள் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

தொலைந்த பொருள் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

தொலைந்த பொருள் கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

இந்த கோவிலில் வழிபட்டால் தொலைந்து போன பொருட்கள் திரும்ப கிடைக்கும்
மதுரையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருவாதவூர். மதுரை ஒத்தக்கடையில் இருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவு பயணித்தால், திருவாதவூர் திருத்தலத்தை அடையலாம். மாணிக்கவாசகர் அவதரித்த புண்ணியத் திருத்தலம் இது.

இங்கே உள்ள ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனின் திருநாமம் திருமறைநாதர். வேதநாயகன். அம்பாளின் திருநாமம் வேதவல்லி.சனி பகவான் இந்தத் தலத்துக்கு வந்து, சிவபெருமானை தவமிருந்து வழிபட்டார். இதனால் வாத நோய் நீங்கப் பெற்றார் சனி பகவான்.

எனவே, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டால், கைகால் குடைச்சல், செயல் இழப்பு, பக்கவாதம் முதலான வாத நோய்ப் பிரச்சினைகள் விரைவில் குணமாகும் என்பது ஐதீகம்.மேலும் இங்கே சனி பகவான் தனிச்சந்நிதியில் கோயில் கொண்டிருக்கிறார். எனவே இங்கு வந்து வாத நோயில் இருந்து விடுபட்ட சனீஸ்வரரையும் வேண்டிக்கொண்டால், சனி கிரக தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. திருவாதவூரில் மாணிக்கவாசகர் அவதரித்தது விசேஷம். சனி பகவான் நோய் நீங்கப் பெற்றது சிறப்பு. அதேபோல் பைரவரும் இங்கு மகத்துவம் வாய்ந்தராகப் போற்றப்படுகிறார். இங்கு உள்ள பைரவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் கனிவுடனும் காட்சி தருகிறார்.

திருவாதவூரில் சந்நிதி கொண்டிருக்கும் பைரவரை எட்டு அஷ்டமியில் வழிபட்டு வந்தால், தொலைந்து போன வாகனங்கள், பொருட்கள் திரும்பவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். அதேபோல், திருமறைநாதர், சனிபகவான், பைரவர் முதலானோரை சந்தர்ப்பம் கிடைக்கும் போது இந்தத் தலத்துக்கு வந்து தரிசித்து, ஐந்து நல்லெண்னெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கும் என்பது உறுதி. வீட்டில் திருவாதவூர் தெய்வங்களை மனதில் நினைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால், தொலைந்து போன பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும்.மிகத் தொன்மையான திருவாதவூர் சிவனை வேண்டுங்கள். எல்லா தொல்லைகளில் இருந்தும் விடுபடுவீர்கள்.

பனமலைபேட்டை தாளகிரீஸ்வரர் ஆலயதரிசனம்.
தமிழ்நாட்டிலுள்ள, விழுப்புரம் மாவட்டம், பனமலை என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில்.
அமைவிடம்
இவ்வாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள பனமலை கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. பனமலை, செஞ்சியிலிருந்து 23கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வரலாறு
“தாள் ” என்ற எழுது பனை மரத்தை குறிக்கும். பனை மரத்தை தலமரமாக கொண்ட சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், கைலாசநாதர் கோயில், பனமலை தாளகிரீசுவரர் கோயில் இவ்வரசனால் கட்டப்பட்டைவை.
பல்லவர் கால சுவர் ஓவியம்
எழில் மிகு சோமஸ்கந்தர் தேவியுடன் இருக்கும் ஏழாம் நூற்றாண்டு கலையழகு மிக்க சுவர் ஓவியம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வகம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களில் இந்த ஓவியம் ஒன்று.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 17 =

Most Popular