அக்ஷய திருதியை ஸ்பெஷல்

305

ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பெருமை அளவிற்கடங்காதது.
ஸ்ரீ_ஆளவந்தார்_அருளிய
“ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்திரம்” என்ற நான்கு ஸ்லோகங்களில் மஹாலக்ஷ்மியின் பெருமைகளை நாம் உணரலாம்

. தமிழ் அர்த்தத்துடன் உள்ள இந்த நான்கு ஸ்லோகங்களைச் சொன்னால்
ஸ்ரீமஹாலக்ஷ்மியின் பூரண அருளைப் பெறலாம்.

#ஸ்ரீ_மகாலக்ஷ்மி #ஸ்தோத்ரம் – 1

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம:
காந்தஸ்தே புருஷோத்தம: பணிபதி: ய்யாஸநம் வாஹகம்
வேதாத்மா விஹகேஸ்வரோ யவநிகா மாயா ஜகந் மோஹினீ
பிரம்மேஸாதி ஸுரவ்ரஜ: ஸதயித: த்வத்தாஸதாதாஸுகண:
ஸ்ரீரித்யேவச நாமதே பகவதி ! ப்ரூம: கதம த்வாம் வயம் ||

அம்மா! உன் கணவனோ புருஷோத்தமனாகிறான். ஆதிஷேசன், உனக்குப் புல்கும் அணையும் ஆஸனமும் ஆகியுள்ளான். வேதாத்மாவான வைனதேயன், வாகன வடிவு கொண்டான். உலகம் முழுவதையும் கவர்ந்திழுக்கும் இயற்கை ப்ரக்ருதி உனக்குத் தொங்கும் திரை. தேவர்களும் அவர்கள் தேவிமாரும் உன்னிடம் பணிபுரியும் பணியாளர்களாக நிற்கின்றனர். உன் திருநாமம் மிகப் பெரிய சுருக்கமான “#ஸ்ரீ”: என்னும் ஒற்றை எழுத்தேயாகும். இவ்விதமாக உள்ள ஸர்வேஸ்வரியான உன்னை எப்படிச் சொல்லுவேன்? எப்படி அழைப்பேன்?

#ஸ்ரீ_மகாலக்ஷ்மி #ஸ்தோத்ரம் – 2

யஸ்யாஸ்தே மஹிமாநம் ஆத்மந இவ த்வத்வல்ல போபி ப்ரபு:
நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாறுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபந்த இதிச ஸ்தோஷ்யாம்ஹம் நிர்பய:
லோகைஸ்வரி! லோக நாததயிதே! தாந்தே! தயாம்தே விதந் ||

ஸர்வ லோகேஸ்வரி! உன் கணவன் எல்லாம் வல்ல இறைவனேயானாலும், உன் பெருமைகளைத் தன் பெருமைகளைப் போல் அறிய மாட்டான். இவ்வளவென்று திட்டமாக, அவை இயல்பாகவே அனுகூலமாக நன்கு அமைந்து எல்லையைக் கடந்து நிற்கின்றன அல்லவா? அப்படிப்பட்ட உன்னை, ஹே, லோகநாதனின் நாயகியே ! உன் அடியன் என்றும் உன் அடியை அடைந்தவன் என்றும் ஒருவாறு உள்ளத்தில் பயங்கெட்டு, உன் அருளை நம்பித் துதிக்க ஆரம்பிக்கிறேன்.

#ஸ்ரீ_மகாலக்ஷ்மி #ஸ்தோத்ரம் – 3

ஈஷத் த்வத்கணா நிரீக்ஷண ஸுதா ஸந்து க்ஷணாத் ரக்ஷ்யதே
நஷ்டம் ப்ராக் ததலாபத: த்ரிபுவநம் ஸம்ப்ர த்யநந் தோதயம்
ஸ்ரேயோ நஹ்யரவிந்த லோசநமன: காந்தா ப்ரஸாதாத் ருதே
ஸம்ஸ்ருத்யக்ஷர வைஷ்ணவாத்வாஸு ந்ருணாம் ஸம்பாவ்யதே கர்ஹிசித் ||

தாயே! உன் சிறிய அருள் பார்வை போதும். அது இல்லாமையினால் தானே உலகம், முன்பு பிரளய காலத்தில் உலர்ந்து ஒழிந்தது? இப்போழுது மீண்டும் மறுபடியும் பிறந்து படர்ந்துள்ளது. அரவிந்தலோசனன் மனமுவக்கும் மஹரிஷியான உன் அநுக்ரஹமின்றி, உலகில் இங்கோ, மேலுலகிலோ, இப்பொழுதோ, எப்பொழுதோ, மனிதர்களுக்கு எந்த மகிழ்ச்சியும் உண்டாகாதே?

#ஸ்ரீ_மகாலக்ஷ்மி #ஸ்தோத்ரம் – 4

ஸாந்தாநந்த மஹாவிபூதி பிரமம்யத்ப்ரஹ்ம ரூபம் ஹரே:
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத்ப்ரியதரம் ரூபம் யதத்யத்புதம்
யாந்யந்யாநி யதாஸுகம் விஹரதோ ரூபாணி ஸர்வாணி தாநி
ஆஹு: ஸ்வை ரறுரூபரூபவிபவை காடோபகூடாநி தே ||

மஹாலக்ஷ்மி! சாந்தமாய், அநந்தமாய், ஆனந்தமாய் உள்ள மஹாவிபூதி என்னும் பகவானின் ஸ்வரூபத்திலும், அதனினும் அவனுக்கு மிகவும் பிடித்தமான மூர்த்த ப்ரஹ்மம் என்னும் அவனுடைய அத்புதத் திருவுருவத்திலும், மற்றும் அவன் தன் சங்கல்பத்தினால் பலவாறாக அவ்வப்பொழுது எடுத்து மகிழும் ராமக் கிருஷ்ணாதி அவதார விக்ரஹங்களிலும் நீ உன் இச்சைப்படி எடுத்துக் கொண்ட, அவற்றுக்கு ஏற்ற அமைப்பு, குணங்கள், பெருமை முதலியன உடைய உன் ஸ்வரூப ரூபாதிகள் கலந்து நிற்கின்றன.

#ஓம் #மகாலக்ஷ்ம்யை #நமஹ !