ஆனித் தேர் அன்று தில்லையில் அதிசயம். வழக்கத்திற்கு மாறாக, பேரம்பலத்தில் நடராஜர் எழுந்தருளி நவக்ரஹங்களுக்கு தரிசனம். உலக ஷேமத்திற்காகவே அம்பலவாணர் இவ்வதிசயம் நிகழ்த்தியதாக தீஷ்தர்கள் நம்பிக்கை* .
சிதம்யரம் நடராஜர் கோயில் ஆனி உத்திர மஹோர்த்ஸவம் 19.06.2020 அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டது.
கொரானா தொற்றின் காரணமாக, உற்சவம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் திருக்கோயில் வளாகத்தின் உள்ளேயே நிகழ்த்திக் கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
மேலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தீஷ்தர்கள் மட்டுமே கோயிலினுள் அனுமதிக்கப்படுவர் என்றும் உத்தரவிட்டது.
அவ்வண்ணமே 19.06.2020 அன்று தொடங்கி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான தீக்ஷ்தர்கள் மட்டுமே, தினமும் இரவு பகல் இரு வேளையும், அந்தந்த நாளுக்குரிய வாகனஙகளில் பஞ்ச மூர்த்திகளை எழுந்தருளச் செய்து கோயில் வெளிப்ரகாரத்தை வலம் செய்வித்து திருவிழாவை சிறப்பாக நடத்தினர்.
ஓன்பதாம் நாள் தேர் திருவிழா அன்று ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்மையுடன் சிற்சபையிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு, உட்ப்ரகாரம் வலம் வந்து, 21 படி ஏறி, நடவானப் பந்தல் வழியாக தேரினை வந்தடைவது வழக்கம்.
இவ்வாண்டு கொரானா தொற்று அச்சுறுத்தலால், திருத்தேர் வீதிஉலா வர அனுமதி இல்லை.
கடந்த காலங்களில், கன மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் தில்லை திருத்தேர் திரு வீதிஉலா தடைப்பட்டது உண்டு. அது போன்ற சந்தர்ப்பங்களில், சுவாமி சிற்சபையிலிருந்து புறப்பட்டு, உள் ப்ரகாரம் வலம் வந்து, 21 படி ஏறி நேராக ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளுவது வழக்கம்.
ஆனால் இவ்வருடம், 27.06.2020 தேர் திருநாளன்று, அதிகாலையில் சுவாமி சிற்சபையிலிருந்து புறப்படும் சமயம், சுவாமி 21 படியை தாண்டக்கூடாது என திடீர் உத்திரவு பிறப்பிக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த தீக்ஷ்தர்கள், செய்வதறியாது, சுவாமி மற்றும் அம்பாளை சுமந்து, உள் ப்ரகாரம் வலம் வந்து, வழக்கத்திற்கு மாறாக, தேவ சபை என்றழைக்கப்படும் பேரம்பலத்தில் எழுந்தருளச் செய்தனர்.
பிறகு மாவட்ட நிர்வாகத்திற்கு சுவாமியின் ஆயரங்கால் மண்டப (ராஜசபா) ப்ரவேசத்தின் முக்கியத்துவத்தை சுமார் 9 மணி நேரம் எடுத்துக்கூறி , அனுமதிபெற்று பின் சுவாமியை பேரம்பலத்திலிருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்தனர்.
இந்ந 9 மணி நேரமும் ஸ்ரீ நடராஜ. மூர்த்தி, சிவகாமி அம்மன் சமேதராக தேரலங்காரத்துடன் வழக்கத்திற்கு மாறாக தேவசபை என்று அழைக்கப்படும் பேரம்பலத்தில் வீற்றிருந்தார்.
இது சிதம்பர வரலாற்றிலேயே இதுவரை நிகழ்ந்திராத அதிசய சம்பவமாகும்.
இது ஏன் நிகழ்ந்தது?
பேரம்பலத்திற்கு அருகே மேற்கு பக்கத்தில் சனி பகவான் மற்றும் நவகிரஹ சந்நதிகள் , பேரம்பலத்தை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளன.
நவக்ரஹ தோஷத்தால் உலகம் எங்கும் கொரானா நோய் தொற்று அச்சுறுத்தி வரும் இச்சமயத்தில், நவக்ரஹங்களை சாந்தி செய்து உலக மக்களை உய்வடைய செய்யவே, வரலாற்றிலேயே நிகழாத அதிசயமாக தேரலங்காரத்துடன், சிவகாமி அம்பாள் ஸமேதராக ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தி யேரம்பலத்தில் எழுந்தருளி நவக்ரஹங்களுக்கு சுமார் ஒன்யது மணி நேரம் காட்சி தந்துள்ளார் என சிதம்பரம் சபாநாயகர் கோயில் பொது தீக்ஷ்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.
இவ்வதிசய நிகழ்வின் வாயிலாக உலக மக்கள் நலமுற
சிவகாமி அம்பாள் ஸமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ மூர்த்தி அருள்பாலித்துள்ளார் எனவும், எனவே உலக மக்கள் கொரானா நோய் தொற்று பாதிப்புக்களில் இருந்து வெகு விரைவில் மீண்டு விடுவார்கள் எனவும் அவர்கள் உறுதியுடன் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஓம் சிவாய நமஹ…
