ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க
நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.
* திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.
* திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில்
முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.
* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்ய
ப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்
கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.
* திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசிச்சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.
* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட
நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம்
முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.
* ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம்
நோய்களை தீர்க்கும் மருந்தாகக்கருதப்படுகிறது.
* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச்சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப்
பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத்
தீர்க்கிறது.
* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.
* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும்
இரவில் பள்ளியறையின்போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம்
செய்யப்படுகின்றன.
* கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாமபூஜையின்போது சுக்கு,
மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும்
மணமிக்க கஷாயம் பிரசாதமாகத்தரப்படுகிறது.
* நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத்தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.
* கேரளம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம்
பிரசாதமாக படைக்கப்படுகிறது.
* திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம்
செய்யப்படுகிறது.
* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால்
தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய்
தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
* குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும்
நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது.
அருவியால், அவருக்கு தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த
ஐதீகம்.
*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசிமாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின்
பிரதான பிரசாதம்.
*திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக்
கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப்பொங்கலும் நிவேதனம்
செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.
* சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும்
சிறப்பான நிவேதனங்கள்.
