Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalஅரசமரத்தை சுற்றினால் உண்டாகும் நன்மைகள்!

அரசமரத்தை சுற்றினால் உண்டாகும் நன்மைகள்!

அரசமரத்தை சுற்றினால் உண்டாகும் நன்மைகள்!

குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.
1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்
2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்
3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்
4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்
5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்
6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம் வரக்கூடாது
7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.

மாந்திரீக பரிகாரங்கள்:
(1) எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.
(2) மாமனார் மச்சினர் மச்சினி மாமியார் போன்ற உறவுகளிடம் இருந்து எதுவும் உதவி வரவில்லை எனில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் இலவச குடிநீர் வசதி செய்து வர, உதவிகள் வர ஆரம்பிக்கும்.
(3) அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் பச்சைகளிமண்அகல்ஒற்றைப்படையில் ஏற்றி வேண்டி வர அவர்களின் கொட்டம் நிற்கும்
(4) கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 48 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்
(5) விலை உயர்ந்த பொருட்களை இழந்து கொண்டே இருந்தால் சனிக்கிழமைகளில் வெளிர் நீல துணியில் எள் உருண்டைகள் வைத்து இரவு நேரத்தில் 7 பேருக்கு தானம் செய்ய, விரயம் நிற்கும்.
(6) சிலருக்கு சின்ன வயதில் இருந்தே பண கஷ்டம் மற்றும் தொல்லைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்-அப்படிப்பட்டவர்கள் யாரிடமும் இனாமாகவோ அல்லது நன்கொடையாகவோ எதுவும் பெறக் கூடாது. அதே போல் செய்யாத வேலைக்கு பணம் பெறுவது கூடாது. ஒவ்வொரு திங்களும் ஏதேனும் கோவிலில் 5 பாதாம் பருப்புகள் தானமாக வழங்கி வர நிலையில் நிச்சயமான மாற்றம் ஏற்படும்.
(7) தினசரி அரச மர வழிபாடு செய்து வர நேர் மறை சக்திகள் நம்முடனே இருக்கும். நல்லவை சித்திக்கும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =

Most Popular