கால பைரவரை வழிபட கஷ்டங்கள் தீரும்!
காக்கும் கடவுள் காலபைரவரை வழிபட ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி. அந்த வகையில் இன்று தேய்பிறை அஷ்டமி. சனிபகவானின் குரு காலபைரவர் என்பதால் இன்றைய தினம் பைரவரை வழிபட சனி தோஷங்களும், சகல தோஷங்களும் நீங்கும். கால பைரவர் வழிபாடு நம்மை எல்லா வகையான கெடுதல்களில் இருந்தும் காப்பாற்றும். கால பைரவர் வழிபாடு நமக்கு அரண் போன்றது. பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்.
தேய்பிறை அஷ்டமி இன்று ஸ்ரீ காலபைரவர் வழிபாடு அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும்.
எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். சிவபெருமானின் அம்சமான பைரவர் காசி நகரின் காவல் தெய்வம், நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான்.
சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம்.
சிவபெருமானின் 64 வடிவங்களில் கால பைரவமூர்த்தியும் ஒருவர். காலபைரவரைச் சரணடைந்தவர்கள் காலச் சுழலில் சிக்கித் தவிக்காது மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை. அதேபோல தீராத நோய், கடன், பயம் ஆகியவற்றையும் நீக்கி அருள்பவர் கால பைரவர். அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. அதிலும் சமீபமாக, பைரவருக்கென்றே தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றனர்.
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம்.
சிவபெருமானின் 64 வடிவங்களில் கால பைரவமூர்த்தியும் ஒருவர். காலபைரவரைச் சரணடைந்தவர்கள் காலச் சுழலில் சிக்கித் தவிக்காது மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை. அதேபோல தீராத நோய், கடன், பயம் ஆகியவற்றையும் நீக்கி அருள்பவர் கால பைரவர். அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. அதிலும் சமீபமாக, பைரவருக்கென்றே தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றனர்.
பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வழக்கு முதலான சிக்கல்களில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம்.
சஷ்டி திதி முருகப் பெருமானுக்கு உரியது. ஏகாதசி திதி பெருமாளுக்கு உகந்தது. சதுர்த்தி விநாயகருக்கும் பஞ்சமி வாராஹி தேவிக்கும் முக்கியமான நாள். திரயோதசி திதி என்பது பிரதோஷமாக சிவ வழிபாட்டுக்கு உரிய நாளாக போற்றி வணங்கப்படுகிறது.
இதேபோல், அஷ்டமி திதி என்பது பைரவ வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாளாகச் சொல்கின்றனர். தேய்பிறை அஷ்டமியில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்வதும் பைரவருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டினால் தடைகள் தகர்க்கப்பட்டு வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
இன்று சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், பைரவாஷ்டகம் பாராயணம் செய்வோம். பைரவரை தரிசிப்போம். செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவோம். முக்கியமாக, மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது நல்லது. இதனால் நம் கர்மவினைகளையெல்லாம் மன்னிக்கப்பட்டு காலபைரவரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. உங்கள் கடன் தீர வேண்டுமா? அப்போ உடனே இந்த பரிகாரத்தை பைரவருக்கு செய்யுங்கள். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும்.
நாம் ஒவ்வொருவருக்கும் கடன் பிரச்சனைதான் பெரிய பிரச்னையாக இருக்கும். ஒருவரிடம் கடன் வாங்கி விட்டால் போதும். அவர்கள் எப்போது வீட்டிற்கு வந்து என்ன சொல்லித் திட்டி கடனை திருப்பி கேட்பார்கள் என்று மனது எப்பொழுதும் கவலையுடனும், படபடப்புடனுமே இருக்கும். இவ்வாறான கடன் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட பைரவருக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
எவரும் மகிழ்ச்சியாக விருப்பத்துடன் கடன் வாங்குவதில்லை. ஆனால் சில நேரங்களில் தாங்கள் சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.
இவ்வாறான கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட பைரவருக்கு மிளகு பரிகாரம் செய்தல் வேண்டும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
கருப்பு மிளகு
அங்கு பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். தீபம் ஏற்றும் பொழுது உங்கள் மனதில் எவரிடம் நீங்கள் கடன் வாங்கி உள்ளீர்களோ அவரின் பெயரை உச்சரித்து, இவரிடம் நான் வாங்கிய கடன் விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும்.
தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் கடன் பிரச்சனை விரைவில் தீர்ந்து மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதேபோல் வாரம் ஒரு முறையாவது மிளகுடன் சிறிதளவு கல்லுப்பு சேர்த்து உங்களையும், உங்கள் வீட்டையும் சுற்றி விட்டு அதனை எரியும் நெருப்பில் போட்டு விட்டால் அந்த நெருப்பில் எப்படி மிளகு பொரிகிறதோ அதே போல் உங்களுக்கு இருக்கும் அனைத்து கண் திருஷ்டிகளும் பொரிந்து விடும். பிறகு உங்கள் வீட்டில் பணத்திற்கான வரவு நீங்கள் எதிர்பார்க்காத வகையில் உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.