தெரிந்து கொள்ளவேண்டிய ஆலய தகவல்கள் – பகுதி 1!
1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை – திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் – ஐப்பசி பௌர்ணமி
3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் – தட்சிணாமூர்த்தி
4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்? திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்)
5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் – திருக்கடையூர்
6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் – பட்டீஸ்வரம்
7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் – திருமூலர்
8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் – திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)
9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது – துலாஸ்நானம்
10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது – கடைமுகஸ்நானம்
11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன் – கோச்செங்கட்சோழன்
12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் – நடராஜர் (கூத்து என்றால் நடனம்)
13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் – சிதம்பரம்
14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம் – காசி
15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம் – திருவண்ணாமலை
16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம் – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம் – மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர் – சின்முத்திரை
19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர் – சுந்தரர்
20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம் – ஸ்ரீசைலம் (ஆந்திரா)
21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம் – ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம் – திருவண்ணாமலை
23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார் – திருமங்கையாழ்வார்
24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்….
பரணிதீபம் (அணையா தீபம்)
25. அருணாசலம் என்பதன் பொருள் – அருணம்+ அசலம்- சிவந்த மலை
26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை – ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்
27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர் – பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
28. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு – 1997, டிசம்பர் 12
29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் – திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
30.. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது – சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் – 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் – அனுமன்
33.நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்
34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? – அறவிடை (அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் – அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்)
36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? – 108
37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் – காரைக்காலம்மையார்
38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர் – அப்பர் (திருநாவுக்கரசர்)
39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம் – ஆணவம் (ஆணவம் அடங்கினால் ஆனந்தம் உண்டாகும்) முயலகன்
40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் – குற்றாலம்
