Tuesday, October 24, 2023
HomeAanmeega Thagavalgalஜபத்தில் எத்தனை வகைகள் உண்டு தெரியுமா?

ஜபத்தில் எத்தனை வகைகள் உண்டு தெரியுமா?

ஜபத்தில் எத்தனை வகைகள் உண்டு தெரியுமா?

ஜபத்தில் பலவகை உண்டு. அது என்னென்ன, அதனால், என்ன பலன்கள் என்று பார்க்கலாம் வாங்க.

உபாம்சு ஜபம்:

ஒலியை வெளியே எழுப்பாமல், உதடு மற்றும் நாக்கு இந்த இரண்டும் மட்டும் அசைய மந்திரத்தை சொல்வதே உபாம்சு ஜபம் எனப்படும்.

வாசிக ஜபம்:

சத்தமாக வாய்விட்டு மற்றவர்கள் கேட்க கூடிய அளவிற்கு மந்திரத்தை சொல்வதே வாசிக ஜபம் எனப்படும்.

லிகித ஜபம்

புனித மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் எழுதுவது என்பது லிகித ஜபமாகும்.

மானஸ ஜபம்

இந்த முறையில் புனித மந்திரம் மனதிற்குள் சொல்வதே ஆகும்.

அஜபா ஜபம்:

இறைவனின் நாமத்தை எந்த நேரமும் சொல்லிக் கொண்டே இருப்பது அஜபா ஜபம் எனப்படும்.

அகண்ட ஜபம்:

புனித மந்திரமானது ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபிக்கப்படுகிறது. இதனை கூட்டுவழிபாடாகவும் செய்வது வழக்கம். மிக நீண்ட நேரம், பலரால் சேர்ந்து செய்யப்படும் ஜபம் அகண்ட ஜபம் அல்லது ஜபயக்ஞம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதார சக்ரங்களில் ஜபம்:

இந்த முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி சக்ஸ்ராரம் வரையிலுள்ள ஒவ்வொரு சக்ரத்திலும் மனதை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது.

புரஸ்சரணம்:

இதில் ஒவ்வொரு நிலையையும் தாண்டி சக்ஸ்ராரத்தை அடைந்தவுடன் சாதகனானவன், மீண்டும் சகஸ்ராரத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆதாரமாக மனதை நிறுத்தி ஜபம் செய்வது புரஸ்சரணம் எனப்படும்.

சாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு மேலானது.

அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது.

உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபமானது 1000 மடங்கு உயர்ந்தது,

அதிகமான விரைவாக பலனை தர கூடியது. என்று “மனு சம்ஹிதை“ என்ற நூல் கூறுகிறது.

ஜபம் செய்தால் உண்டாகும் பலன்கள், எந்த திசையில் ஜபம் செய்தல் வேண்டும்:

கிழக்கு நோக்கி ஜபம் செய்தால்: வசியம்

தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால்: நோய் தீரும்

தெற்கு நோக்கி ஜபம் செய்தால்: பெரும் தீமை

தென்மேற்கு நோக்கி ஜபம் செய்தால்: வருமை

மேற்கு நோக்கி ஜபம் செய்தால்: பொருட்செலவு

வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால்: தீயசக்திகளை ஓட்டுதல்

வடக்கு நோக்கி ஜபம் செய்தால்: தங்கம் கல்வி கிடைக்கும்

வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால்: முக்தி கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 8 =

Most Popular