நந்தியை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா?
பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கனவு வரும். அது அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை கூட சுட்டிக் காட்டுவதாக அமையும். கோயில் கோபுரம், முன்னோர்கள், அம்மா, அப்பா, காதலி, விலங்குகள், யானை, ஆடு, மாடு, நந்தி, நண்பர்கள் என்று எல்லாமே கனவில். அப்படி கனவில் வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
நந்தி கனவில் வந்தால் என்ன பலன்?
தொழில் சார்ந்த துறையில் மேன்மையான பலன்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்?
வானவில்லை கனவில் கண்டால் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதைக் குறிக்கும்.
இறைச்சி வெட்டுவது போன்று கனவு கண்டால் என்ன பலன்?
இறைச்சி வெட்டுவது போன்று கனவு கண்டால் எதிரபாராத செயல் மூலமாக நெருக்கடியான சூழ்நிலைகள் அமையும்.
ஆமை கனவில் வந்தால், பயணங்களின் மூலமாக புதுவிதமான அனுபவமும், லாபமும் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
செப்பலைக் கனவில் கண்டால் சில நிகழ்வுகள் மூலமாக மாற்றம் உண்டாகும் எனப்தைக் குறிக்கிறது.
மீன்களைக் கனவில் கண்டால், செய்யும் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும் என்பதைக் குறிக்கிறது.
யானை கனவில் வந்தால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
காவல் அதிகாரிகளை கனவில் கண்டால் விருப்பமில்லாத செயல்கள் மூலமாக புதுவிதமான அனுபவம் ஏற்படும்.
அம்மாவை கனவில் கண்டால் கவனக்குறைவுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.
விநாயகர் சிலையை கனவில் கண்டால், முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி சுபீட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
எருமை மாட்டை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியத்திலும், வாகன பயணங்களிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பூவை கனவில் கண்டால், எதிர்பார்த்த காரியங்கள் கூடிய விரைவில் ஈடேறும் என்பதைக் குறிக்கிறது.
புதிய வீட்டைக் கனவில் கண்டால் நீண்ட நாட்களாக இருந்த உங்களது ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கிறது.
கூடு நிறைய முட்டைகள் இருப்பது போன்று கனவு வந்தால், எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கும்.
சமையில் அறையில் தீப்பிடித்து எரிவது போன்று கனவு வந்தால், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
