பச்சை குங்குமத்தின் ரகசியம் என்னவென்று தெரியுமா?
பொதுவாக ஆண்களாக இருந்தால் தினந்தோறும் குளித்து முடித்துவிட்டு எம் பெருமான் ஈசனை வழிபட்டு நெற்றியில் திருநீறு பூசிக் கொள்வது நல்லது. வெறும் நெற்றியோடு வெளியில் சென்றால் அது பிணத்திற்கு சமம் என்று சொல்வார்கள். இதுவே பச்சை குங்குமத்தை தினந்தோறும் நெற்றியில் வைத்துக் கொண்டால், பண வரவு உண்டாகும் என்பது ஐதீகம். ஏனென்றால், பச்சை குங்குமம் லட்சுமி குபேரர் கோயிலில் கொடுக்க கூடியது. அதுமட்டுமின்றி சென்னையில் திருமுல்லைவாயில் பகுதியில் குடி கொண்டுள்ள பச்சையம்மன் கோயில் பிரசாதமும் கூட.
ஆகையால், தினந்தோறும் இந்த பச்சை குங்குமத்தை நெற்றியில் பூசிக் கொண்டால் நல்லதே நடக்கும். திருமணமான கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு, மாமியார் மருமகள் சண்டை, பெற்றோர் மகன் சண்டை என்று பலரது வீடுகளில் இது தான் தினமும் நடக்கும் நிகழ்வு. யாராக இருந்தாலும் உங்களுடன் சண்டை போடக் கூடாது என்று குபேரர், பச்சையம்மனிடம் வேண்டிக் கொண்டு பச்சைக் குங்குமத்தை நெற்றியில் பூசி வர, சண்டை சமாதானமாகும்.
படிக்கும் மாணவர்களுக்கு சரிவர படிப்பு வரவில்லை என்றாலும், தேர்வுக்கு செல்லும் மாணவர்களாக இருந்தாலும் சரி, இந்த குங்குமத்தை நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும். பச்சை புதன் பகவானுக்குரிய நிறம் என்று சொல்லப்படுகிறது. புதன் கிழமை, புதன் திசை, பஞ்சமி திதி, அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்கள் இந்த பச்சை குங்குமத்தை நெற்றியில் பூசி வந்தால் எல்லா நன்மையும் நடக்கும்.
கேட்டை, ஆயில்யம், ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். அவர்கள் தினந்தோறும் பச்சைநிற குங்குமத்தை பூசிக் கொண்டால் சிக்கல்கள் தீரும். இவர்கள் மட்டும் தான் பூசிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது. உண்மையான பக்தி கொண்டவர்கள் யார் வேண்டுமென்றாலும் பூசிக் கொள்ளலாம்.
வீட்டை விட்டு புறப்பட்டு நல்ல காரியத்திற்காக வெளியில் செல்லும் போது கூட இந்த பச்சை நிற குங்குமத்தை நெற்றியில் பூசிக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர்களும், வேலை தேடி செல்பவர்களும் இந்த பச்சை நிற குங்குமத்தை பூசிக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும் எல்லோரும் பச்சை நிற குங்குமம் பூசிக் கொள்ளலாம். இதை மட்டும்தான் பூச வேண்டும் என்றில்லை.
கூட, திருநீறு, குங்குமம், சந்தனம் என்று எல்லாவற்றையும் பூசிக் கொள்ளலாம். ஆண், பெண் என்று யாராக இருந்தாலும் அவர்களிடம் பக்தி இருக்க வேண்டும். வாரத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். ஒவ்வொரு வாரமும் வியாழன் தோறும் லட்சுமி குபேரன் கோயிலுக்கு சென்று வர பண வரவு அதிகரிக்கும்.
