Wednesday, October 18, 2023
HomeAanmeega Thagavalgalயாருடைய சாபம் பலிக்கும்? யாருடைய சாபம் பலிக்காது தெரியுமா?

யாருடைய சாபம் பலிக்கும்? யாருடைய சாபம் பலிக்காது தெரியுமா?

யாருடைய சாபம் பலிக்கும்? யாருடைய சாபம் பலிக்காது தெரியுமா?

ஒருவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மற்றொருவருக்கு கெடு பலன்களை தன்னுடைய வாயால் கூறுவதை தான் சாபம் என்று கூறுகிறோம். தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடும் விதமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.

அப்படியிருக்கும் போது மற்றவர்களுடைய சாபத்தையும் சேர்த்து நாம் வாங்கிக் கண்டிக் கொண்டால் என்ன ஆகும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள். யாருடைய சாபம் பலிக்கும்? யாருடைய சாபம் பலிக்காது? பொதுவாகவே நாம் உண்டு, நம்முடைய வேலை உண்டு என்று இருந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஒருவருக்கு கோபம் வரும் போது அவர் மற்றவருக்கு சாபம் கொடுத்தால் அது பலிக்குமா? என்று கேட்டால் அதெல்லாம் ஒன்றும் பலிக்காது. ஏனென்றால், கோபத்தில் பேசும் வார்த்தைக்கு எப்படி மதிப்பில்லையே அது போன்று தான் கோபத்தில் விடும் சாபத்திற்கும் பலன் இல்லை.

சாபம் என்றால் என்ன? யாருடைய சாபம் பாதிப்பை ஏற்படுத்தும்? யார் ஒருவர் உண்மையான அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்களோ அவர்கள் விடும் சாபம் பலிக்கும். அவர்கள் சாபம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

பொறாமை குணம் காரணமாக, நாம் நன்றாக இருக்க கூடாது என்று நமக்கு கெட்டதை நினைப்பவர்களுக்கு அவர்கள் கொடுத்த சாபம் அவர்களுக்கே திரும்புவதை நாம் கேள்விப் பட்டிருப்போம். சில இடங்களில் பார்க்கவும் செய்திருப்போம். ஆகவே சாபம் சில இடங்களில் பலிக்க கூடியது தான். ஆனால், அதனை யார் கூறினால் பலிக்கும் என்பதில் தான் சூட்சும ரகசியம் அடங்கியுள்ளது.

தீய கிரகங்களின் பாதிப்பில் இருவருக்கும் ஒருவர் கொடுக்கும் சாபம் பலிக்கும். ஒருவர் எதையும் எதிர்பாரக்காமல மற்றவர்களுக்கு செய்யும் உதவியையும், அன்பையும் யார் ஒருவர் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்களோ அவர்களுக்கு சாபத்தால் பாதிப்பு ஏற்படும்.

பெற்றோர்களை மனம் நோகும்படி பேசினால், அவர்கள் விடும் சாபம் பிள்ளைகளை பாதிக்கும். பெற்றோர்கள் மட்டுமல்லாமல் ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் விடும் சாபம் கூட மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் யாருடைய வாயிலும் விழாமல் இருப்பது நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 4 =

Most Popular