செவ்வாய்க்கிழமையில் கால பைரவர் வழிபாடு செய்தால் என்ன பலன்?
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் கால பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வர இழந்த பொருள் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் கஷ்டங்களை நீக்கும் தெய்வமாக கால பைரவர் கருதப்படுகிறார். மேலும், கடன் பிரச்சனை தீரும், மன அமைதி உண்டாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், கையில் காசு, பணம் புரளும், செல்வ செழிப்பு உண்டாகும், தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடக்கும்.
கால பைரவருக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, அரளிப்பூ மாலை சாற்றி, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால, தேன், பழம் வைத்து வெள்ளைப் பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வைத்து விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோகங்களும் கூடி வரும். தேங்காயில் மூன்று கண் உள்ள பக்கங்களின் மூடியில் 5 விதமான எண்ணெய் (இலுப்பை, விளக்கெண்ணெய், தேய்ங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய்) கொண்டு திரியிட்டு தீபம் ஏற்றி வழிபட சனி பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்கும், ஏழரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் குறையும். பில்லி, ஏவல், சூனியல் அண்டாது.
கால பைரவர் துதி:
நூறுமுறை போற்றி பணிவேன் நானும் உனை
அடியவர் நெஞ்சில் அமைதி நிலை ஆனந்த வாழ்வு கொடுக்கும் உனை
மறவேன் மறவேன் வைரவனே வைரவனே வைரவனே
வாழும் வரை காவல் நின்றிடும் பைரவா
விருப்பங்கள் பலித்திட அருள்வாய் அல்லவா
பிரம்மனின் அகந்தை அழித்திடத்தானே
பரமனும் உனையிங்கு படைத்து வைத்தானே
துயரம் போக்கிடும் தூயவன் நீயே நீலநிறத்துடன்
வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே வடிவெடுத்தாயே
அச்சத்தை விரட்டும் ஆண்டவன் நீயே
எதிரிகள் நடுங்கிட செய்பவன் நீயே
பைரவன் உந்தனினப் பேரைச் சொன்னாலே தைரியம் நெஞ்சினில்
தருபவன் நீயே தருபவன் நீயே தருபவன் நீயே
தேய்பிறை அஷ்டமி திதிவரும் நாளில்
திருவடிப் பணிந்தால் வளம் வரும் வாழ்வில்
கண்கள் மூன்றினைக் கொண்டவன் நீயே கருணை மழையினை
நீ பொழிவாயே நீ பொழிவாயே நீ பொழிவாயே
வரும் வினைத் தீர்க்கும் வல்லவனே வையகம் போற்றும் நல்லவனே
வழங்கிட வேண்டும் திருவருளே வழங்கிட வேண்டும் திருவருளே
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையில் கால பைரவரை வழிபாடு செய்யும் போது இந்த மேலே உள்ள துதி சொல்லி வர வேண்டும்.
