வெற்றி தரும் ஸ்ரீ நரஸிம்ஹ ஜெயந்தி வழிபாடு!
பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மர், நரசிம்ம ஜெயந்தி இன்று கொண்பாடப்பட்டு பக்தர்கள் வழிபடப்படுகிறார். பகவான் ஸ்ரீ நரசிம்மரை வழிபடுவதால் பயம், துக்கம் முதலியன தீர்ந்து பகைவர்களிடம் வெற்றி கிடைக்கும். நரசிம்மர் என்ற இந்த பெயரை குறிப்பிடும்போது, மனிதன் (நர) மற்றும் சிங்கம் (சிம்ஹா) ஆகியவற்றின் கலவையாக நரசிம்மர் உள்ளார். இறைவனை முழுமையாக நம்பி, அவனை நம்பினால் கை விடமாட்டார் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது தான் நரசிம்ம அவதாரம். மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே, அவருக்கே மிகவும் பிடித்த அவதாரம் என்றால் நரசிம்மர் அவதாரம் தான் என்பார்கள்.
ஸ்ரீ நரஸிம்ஹ ஜெயந்தி விரதம் :
இந்த விரதத்தை தொடங்கி, நாள் முழுவதும் நரசிம்மரின் நினைவுடன் ஆராதித்து வழிபட்டு, பூஜை, புனஸ்காரம் செய்து வழிபட்டு விரதத்தை முடிப்பது நல்லது. ஏனெனில் இந்த அந்திமாலை பொழுதில் தான் நரசிம்மர் அவதரித்தார் என்கிறது புராணங்கள். நரசிம்மருக்கு சர்க்கரை பொங்கலும், பானகம் மற்றும் அவரை குளுமையாக்கும் வகையில் சில குளுமையான பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபடுவது மிக சிறந்தது.
உங்களிடம் நரசிம்மரின் புகைப்படம் அல்லது சிலை இல்லையென்றால், விஷ்ணுவின் புகைப்படம் அல்லது சிலை மூலம் பூஜை செய்யலாம். இறைவனின் சிலை அல்லது படத்திற்கு குங்குமம், சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். ஒரு மண், வெள்ளி அல்லது பித்தளை விளக்கு ஏற்றி வைக்கவும். உங்கள் பிரார்த்தனைகளையும் பிரசாதங்களையும் ஏற்றுக்கொள்ள நரசிம்ம பகவானை அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளுக்கு பூக்கள், மற்றும் தானியங்கள் வழங்குங்கள். ஊதுபத்தி ஏற்றவும். இந்த நாளில் நீங்கள் ஏழைகளுக்கு உணவு தானம் செய்யலாம். மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான சிறந்த வழி அன்னாதனம்.
ஸ்ரீ நரசிம்மர் மூல மந்திரம்:
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்,
ஜ்வலந்தம் சர்வதோ முகம் நரசிம்மம்,
பீஷணாம் பத்ரம் ம்ருத்யம் நமாம் யஹம்
நரசிம்மரின் இந்த மூல மந்திரத்தை 108 முறை சொல்லி செவ்வரளி உள்ளிட்ட சிவப்பு நிற மலர்களையும், துளசி பயன்படுத்தி நரசிம்மரை அர்ச்சனை செய்து வணங்கினால் சகலமும் பெற்று வாழ்வில் நலம் சேர்க்கும்.
