சர்வ ஏகாதசி விரதம் கடைபிடிப்பது எப்படி?
பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால் ஏகாதசி விரதத்துக்கு மட்டும் தனித்துவமான மகத்துவம் உண்டு. அது என்ன என்று கேட்டால், பாற்கடலை கடைந்து அமுதம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் முயற்சித்தனர். அப்போது ஏகாதசி நாளன்று தான் அமிர்தம் வெளிப்பட்டது. அப்படி ஏகாதசி நாளன்று வெளிப்பட்ட அமிர்தத்தை துவாதசியன்று தேவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: களவு போன பொருட்கள் திரும்ப கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!
அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் எனது ஐதீகம். ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது.
மேலும் படிக்க: கண் குறைபாடு நீங்க வழிபட வேண்டிய கோயில்!
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை செய்துவிட்டு மகாவிஷ்ணுவை மனதில் வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம். அதேபோல் உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.
Also Read This: எப்போது விளக்கு ஏற்ற வேண்டும்?
ஏகாதசியில் 25 வகைகள் உள்ளது. அவை, உற்பத்தி ஏகாதசி, மோட்ச ஏகாதசி, ஸபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, ஜயா ஏகாதசி, விஜயா ஏகாதசி, ஆமலகி ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி, காமதா ஏகாதசி, வரூதிநி ஏகாதசி, மோகினி ஏகாதசி, அபரா ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி, யோகினி ஏகாதசி, சயினி ஏகாதசி, காமிகா ஏகாதசி, புத்ர(ஜா)தா ஏகாதசி, அஜா ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி, இந்திரா ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி, ரமா ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி, கமலா ஏகாதசி என்பவையே 25 ஏகாதசிகளாகும்.
