Thursday, November 2, 2023
HomeAanmeega Thagavalgalஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்?

ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்?

ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்?

ரோஜாப் பூ மாலை, டையமண்டு கல்கண்டு ஒரு கிலோ, அரை கிலோவுக்குக் குறையாமல் விதையில்லாத கறுப்பு திராட்சைப் பழங்கள், கொஞ்சம் விதையில்லாத பேரீட்சைப் பழங்கள் இத்துடன் கொஞ்சம் வெற்றிலையும், கொட்டைப் பாக்கும், சந்தன பத்திக் கட்டும், 6 நாட்டு வாழைப் பழங்களும் கொண்டு வந்து பத்தி பொருத்தி, தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி, சிகப்பு ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில் உள்ள தெய்வச் சிலைக்கு அணிவிக்க வேண்டும்.

ஜீவசமாதியின் முன்பு நெய்தீபம் ஏற்ற வேண்டும். எந்தெந்த நாட்களில் ஜீவசமாதி வழிபாடு செய்யலாம்? பகைவரோடு போராடி, போராடி களைத்து போன நேர்மையாளர்கள், தங்களது நியாயமான பிரச்னைகள் தீர திங்கட்கிழமை
மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்.

குலதெய்வம் தெரியாதவர்கள், குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள், குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்; இப்படி 8 செவ்வாய்க்கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்;

வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர், புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்; இவ்வாற தொடர்ந்து 8 புதன்கிழமைகளுக்குச் செய்து வர, நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும். தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள், வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது; பணரீதியான பிரச்னைகள் இருப்போர், பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது; பண நெருக்கடி, தொழில் மந்தநிலை, குடும்பப் பிரச்னைகள் என எல்லாவிதமான பிரச்னைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது. நீண்டகாலமாக வழக்குடன் போராடிக்கொண்டிருப்பவர்கள் (எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி) ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள்
மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது. இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும்;

அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ, அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்; துக்கம், பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும், விட்டு விட்டு செய்தாலும் போதுமானது. அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =

Most Popular