Wednesday, October 18, 2023
HomeAanmeega Thagavalgalவீடு கட்டும் பாக்கியம் உண்டாக வீரட்டேஸ்வரர் வழிபாடு!

வீடு கட்டும் பாக்கியம் உண்டாக வீரட்டேஸ்வரர் வழிபாடு!

வீடு கட்டும் பாக்கியம் உண்டாக வழிபட வேண்டிய வீரட்டேஸ்வரர் திருக்கோவில்!

விழுப்புரத்திலிருந்து 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீரட்டேஸ்வரர் திருக்கோவில் . இத்திருக்கோவிலில் அருள்பாளிக்கும் இறைவன் திருநாமம் வீரட்டேஸ்வரர் மற்றும் இறைவியின் பெயர் பெரியநாயகியம்மை ஆகும். இவ்வாலயத்தின் தீர்த்தம் தென்பண்ணை ஆகும்.

வரலாற்று கதை:

அந்தகாசுரனை வதம் செய்த சிவாலய தலம் என சிறப்பு வாய்ந்தது இக்கோவில். சூரிய சந்திரர் ஆகிய இருவரையும் கண்களாக கொண்ட சிவனின் கண்களை ஒருமுறை பார்வதி விளையாட்டாக மூட உலகமே இருள் சூழ்ந்து அந்த இருளே அந்தகாசூரனாக மாறி இறைவனிடம் மோதுகிறது.

இறைவனின் கதையால் பட்ட அடியால் மண்டை உடைந்து ரத்தம் பூமியில் விழுகிறது. அந்தகாசுரனின் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உருவாகி போர் தொடர்கிறது. பார்வதி காளியாக மாறி அந்தகாசுரனின் தலையிலிருந்து வரும் ரத்தத்தை கபாலத்தில் பிடித்து அசுர உற்பத்தியை தடுக்கிறார்கள். வெளிப்பட்ட ரத்தத்திலிருந்து 64 பைரவர்களையும் 64 பைரவிகளையும் உற்பத்தி செய்து தேவர்களுக்கு அருள் செய்கிறார்.

விநாயகர் அகவல் பாடிய திருத்தலம்:

பாரிவள்ளல் தனது மகள்கள் அங்கவை, சங்கவை இருவரையும் அவ்வையார், கபிலர் ஆகியோர் முன்னிலையில் திருக்கோயிலூர் மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்த தலம். அவ்வையார் பொறுமையாக இங்கு உள்ள விநாயகரை “சீத களப “ என்று தொடங்கும் விநாயகர் அகவல் பாடிய திருத்தலம். இங்கு உள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். முருகன் அசுரரை கொன்றதால் ஏற்பட்ட பிரமகத்தி தோஷம் நீங்க பூஜை செய்த இடம். இங்கு உள்ள அஷ்டபூஜ துர்க்கை அற்புதமான சக்தியுடன் நமது கண்களை போன்ற கண்களுடன் அருள்பாலிக்கிறார்.

பலன்கள்:

இங்கு வழிபட்டால் பூர்வ ஜென்ம பாபங்கள் விலகும் புத்திர, பாப தோஷங்கள் விலகி மன நிம்மதி கிடைக்கும். இங்கு வழிபட்டால் வீடு கட்டும் யோகம் உண்டாகும். ராஜராஜசோழன் பிறந்த ஊர். கபிலர் உயிர் வாழ்ந்து உயிர் நீத்த இடம். திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார்.

ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடன் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார். தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன. மங்கள சாசனம் பெற்ற திருவிக்ரமசுவாமி திரு தலம் ஊரின் நடுவில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 4 =

Most Popular