Thursday, November 2, 2023
HomeAanmeega Thagavalgalகோயில்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் - பகுதி 2!

கோயில்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் – பகுதி 2!

கோயில்கள் பற்றிய முக்கியமான தகவல்கள் – பகுதி 2!

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் – சங்கார தாண்டவம்
42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? – வெள்ளியம்பலம் (மதுரை)
43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் – பிரதோஷ நடனம் (புஜங்கலளிதம்)
44. நடராஜருக்குரிய விரத நாட்கள் – திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் – களி
46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் – தாயுமானசுவாமி
47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம் – காளஹஸ்தி
48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர் – பிருங்கி
49. திருமூலர் எழுதிய திருமந்திரம் – திருமுறையாகும்
பத்தாம் திருமுறை
50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம் – திருக்கோலக்கா (தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது.
51.விபூதி என்பதன் நேரடியான பொருள் – மேலான செல்வம்
52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம் – கஞ்சனூர்
53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை? – 12
54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர் – சுந்தரானந்தர்
55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் – ஆச்சாள்புரம் (திருப்பெருமணநல்லூர்)
56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி – திலகவதி
57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார் – சேரமான் பெருமாள் நாயனார்
58.. “அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்’ என்ற அருளாளர் – வள்ளலார்
59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை – மங்கையர்க்கரசியார்
60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்? – அரிமர்த்தனபாண்டியன்
61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன் – மகேந்திரபல்லவன்
62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் – தத்புருஷ முகம் (கிழக்கு நோக்கிய முகம்)
63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை? – எட்டு
64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது? – மாசி தேய்பிறை சதுர்த்தசி
65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்? – 4 கால அபிஷேகம்
66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம் – நமசிவாய
67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்? – சிவாயநம
68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை – திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை? –
அருவுருவம்
70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம் – ராமேஸ்வரம்
71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம் – தட்சிணாமூர்த்தி
72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்? -12
73. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில் – குற்றாலம் குற்றாலநாதர் கோயில்
74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம் – வில்வமரம்
75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி – மானசரோவர்
76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? – 81
77.பதிகம் என்பதன் பொருள் – பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு
78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல் -சிவஞானபோதம்
79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை – டமருகம் அல்லது துடி
80.அனுபூதி என்பதன் பொருள் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 14 =

Most Popular