வாழை இலையின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
வாழை இலையில் உணவருந்தினால் உடலுக்கு நன்மை அளிக்கும். ஏதும், விருந்து விசேஷம் என்றால் தலை வாழையில் விருந்து அளிப்பது வழக்கம். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கையில் வாழை இலையை மறந்து வருகிறோம். ஹோட்டல்களில் கூட வாழை இலை இருப்பதில்லை.
இலையில் உள்ள நன்மைகளை அறிந்து நமது முன்னோர்கள் காலங்காலமாக வாழை இலையில் தான் உணவருந்தி வந்துள்ளனர். விசேஷ நாட்களில் கூட வீட்டிலேயும் வாழை இலையை பயன்படுத்தியுள்ளனர்.
சரி, வாழை இலையில் என்னென்ன நன்மைகள் உண்டு என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…
- தினந்தோறும் வாழை இலையில் உணவருந்தி வந்தால், ரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் அனைத்தும் நீங்கி, ரத்தத்தினை சுத்தப்படுத்தும்.
- எப்போதும் வாழை இலையில் சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏதும் ஏற்படாது.
- வாழை இலையில் சாப்பிட்டு வர செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க உதவும்.
- அல்சர் மற்றும் வயிறு எரிச்சல் ஆகிய பிரச்சனை இருப்பவர்கள் தினந்தோறும் வாழை இலையில் சாப்பிட்டு வரலாம்.
- இளநரை வராமலும், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக வளரவும் வாழை இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களை வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் வெப்பத்தின் தாக்கம் குறையும்.
- சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும் மனமாகவும் இருக்கும்.
- பச்சிளம் குழந்தைகளுக்கு உடலில் நல்லெண்ணெய் தடவி வாழை இலையில் காலை நேரத்தில் சூரிய ஒளி படும்படி படுக்க வைக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் வைட்டமின் டியும், இலையிலிருந்து பெறப்படும் குளுமையும் கிடைக்கப்பெற்று, குழந்தைகளை சரும நோயிலிருந்து பாதுகாக்கும்.
எப்படி அணிலுக்கு 3 கோடுகள் இருக்கிறதோ, அது போல இலைக்கு நடுவில் கோடு இருக்கும். இலையின் வலது பக்க மூலையில் உப்பு மற்றும் ஊறுகாய் வைப்பார்கள். நடுவில் இருக்கும் கோட்டுக்கு மேல் சாதத்தை தவிர மற்ற வகைகளைச் சரியாக வைப்பார்கள். புராணக் காலத்திலிருந்தே வாழை இலை இருக்கிறது. ஆனால், அப்போது எலலாம் இலையில் கோடு இருந்ததா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில்.
ராமாயணக் காலத்தில் தான் இலையில் கோடு வந்துள்ளது. சீதாதேவியை மீட்ட ராமபிரான் ஆஞ்சநேயருடன் அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பைப் பெற்றார்.
அப்போது தனக்கு உதவியாக இருந்த ஆஞ்சநேயரை கௌரவிக்கும் வகையில் தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கம் உள்ள உணவை ஆஞ்சநேயர் உண்ணும்படி ராமபிரான் கூறினார். மற்றொரு பக்கம் உள்ள உணவை ராமபிரான் சாப்பிட்டார்.
ராமபிரான் அமர்ந்திருந்த இலையின் பக்கமாக மனிதர்கள் சாப்பிடும் சாப்பாடும், ஆஞ்சநேயர் அமர்ந்திருந்த இலையின் பக்கம் குரங்குகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் பரிமாறப்பட்டன.
