கோயில்கள் பற்றிய தகவல்கள் – பகுதி 4!

31

கோயில்கள் பற்றிய தகவல்கள் – பகுதி 4!

121. “ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்’ என்று பாடியவர்- சுந்தரர்
122. “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று போற்றியவர் – மாணிக்கவாசகர்
123. “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர் – திருமூலர்
124. “உழைக்கும் பொழுதும் அன்னையே’ என்று ஓடி வரும் அருளாளர் – அபிராமி பட்டர்
125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர் – குலசேகராழ்வார்
126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர் – இடைக்காட்டுச்சித்தர்
127. கோயில் என்பதன் பொருள் – கடவுளின் வீடு, அரண்மனை
128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள் – சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
129. சித்தாந்தத்தில் “சஞ்சிதம்’ என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்
130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்? சிவபெருமான்
131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம் – சாமவேதம்
132.நமசிவாய’ மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர் – ஆனாய நாயனார்
133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்
133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம் – திருவையாறு
134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர் – ராஜராஜசோழன்
135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் – சோமாஸ்கந்தர்
136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல் – விநாயகர் அகவல்.
137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர் – மூர்த்திநாயனார்
138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம் – காளஹஸ்தி
139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம் – திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)
140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான் – மதுரை சொக்கநாதர்
141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன் – திருச்சி தாயுமானவர்
142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம் – திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)
143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம் – திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)
144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி
145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம் – திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்
146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில் – திருவண்ணாமலை
147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம் – திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)
148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள் – திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)
149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம் (காளை)
150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம் – சந்தியா தாண்டவம்
151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம் – கேதார்நாத்
152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று (பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)
153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள் – திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்
154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது – பிட்சாடனர்
155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம் – திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார் – நமிநந்தியடிகள் ( திருவாரூர்)
157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம் – திருவானைக்காவல்
158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன் – கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)
159.சிவன் “அம்மா’ என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்
160. தாச (பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்….
திருநாவுக்கரசர்