சுடச்சுட வாழைத்தண்டு அடையுடன் வாழைத்தண்டு மோர் கூட்டு செய்யலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – முக்கால் கப்,
இளசான வாழைத்தண்டு (சிறியது) – ஒன்று ,
பூண்டு – 4 பல், (விருப்பப்பட்டால்),
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – ஒரு துண்டு,
காய்ந்த மிளகாய் – மூன்று,
பச்சை மிளகாய் – இரண்டு,
பெருங்காயத் தூள் – சிறிதளவு,
முளைகட்டிய பாசிப்பயறு – ஒரு கப், கொண்டைக்கடலை – ஒரு கப்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் வாழைத்தண்டின் தோல் சீவி, நார் எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஊற வைத்த அரிசியுடன் பூண்டு, சோம்பு, இஞ்சி, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து கரகரப்பாக அடைமாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
முளைகட்டிய பயிறு, கொண்டைக்கடலையை தனியாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்க்கவும். கல் காய்ந்ததும் மிதமான தீயில் அடை மாவை ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். சுவையான வாழைத்தண்டு அடை சுவைக்க தயார்.
வாழைத்தண்டு மோர் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
1. வாழைத்தண்டு – 2 பொடியாக நறுக்கியது
2. கடுகு – ஒரு டீஸ்பூன்
3. உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
4. தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்
5. பச்சை மிளகாய் – ஒன்று
6. மோர், தயிர் – சிறிதளவு
7. உப்பு – தேவையான அளவு.
8. எண்ணெய் – தேவையான அளவு.
9. கொத்தமல்லி இலை – சிறிதளவு.
செய்முறை விளக்கம்:
1. பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை நன்கு சுத்தம் செய்து நார் நீக்கி எடுத்துக் கொள்ளவும் .
2. பின்னர் சிறிது தண்ணீரில் மோர் விட்டு, நறுக்கிய வாழைத்தண்டை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
3. ஊறிய பின் வாழைத்தண்டை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
4. பின்னர் ஒரு கடாயில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.
5. பின் அத்துடன் தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும்
6. பின் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
7. ஆறியவுடன் சிறிது தயிர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வாழைத்தாண்டு மோர் கூட்டு ரெடி. இதனை வாழைத்தண்டு அடை யுடன் சுடச்சுட பரிமாறவும்.