Saturday, October 28, 2023
HomeSlogamசூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்!

சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்!

சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்!

சூரிய நமஸ்காரம் செய்யும் முறை:

சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.

சூர்ய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல வேண்டிய சூர்ய நமஸ்காரம மந்திரங்கள்:

ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

சூரிய நமஸ்காரம் முடிந்ததம் சூரியனையும் மற்ற நவகிரகங்களையும் நமஸ்கரிக்கும் மந்திரம்:

நம ஸூர்யாய ஸோமாய அங்காரகாய புதாயச
குரு சுக்ர சனிப்யஸ்ச ராகவே கேதவே நமஹ.

சூரிய பகவான் காயத்ரி மந்திரம்:

பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்

என்பது சூரிய காயத்ரி. சூரிய நமஸ்காரம் செய்ய இயலாதவர்கள், இதனை மூன்று முறை ஜெபித்து விட்டு சூரியனை இரு கை கூப்பி நமஸ்காரம் செய்யலாம்.

ஓம் தினகராய பாஸ்கராய
ஜ்யோதிஸ்வ ரூபாய
சூர்ய நாராயணாய தேவாய
நமோ நமஹ

இதுவும் சூரிய நமஸ்காரத்திற்கு எளிய மந்திரம். ராமாயணத்தில் ஸ்ரீராமனுக்கு அகஸ்தியர் உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயத்தையும் பாராயணம் செய்யலாம்.

ஒரே சுலோகத்தில் நவக்ரஹ தியானம்:

ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமி ஸுதாம் சு தனய:
ப்ரக்ஜாம் குருர் கௌரவம்
கான்ய: கோமள வாக் விலாஸ மதுலம்
மந்தோமுத முததம் ஸர்வத:
ராஹுர் பாஹுபலம் விரோத சமனம்
கேது: குலஸ்யோன்னதிம் ஓம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 18 =

Most Popular