இன்று நல்ல நாள் வருமா? நாளையாவது நல்ல நாள் வருமா?

26

ஒவ்வொரு நாளையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய தெய்வ பக்தி நிறைந்தவர்கள் இருக்கின்றார்கள்.
மனம் சோர்ந்து போகும் போது தாயின் கருவறை முன்பு கண்ணீருடன் கதறி அழுது கொண்டிருப்போர் இருக்கின்றார்கள்.
தாயே கண்திறந்து வழி காட்டினால் திருமண பருவத்திலேயே இருக்கும் தனது பெண்ணுக்கு வரன் தேடி திருமணம் செய்து கொடுத்து விடலாமே என்று ஏக்கப் பெருமூச்சுடன் தாயை வணங்கு கூடியவர்களும் இருக்கின்றார்கள்.
நன்றாகப் படித்து முடித்துவிட்ட மகனை ஒரு நல்ல வேலையில் சேர்க்க முடியாமல் தவிக்கின்றோம் அம்மா உன் கருணையால் அவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டால் எங்கள் பஞ்சம் எல்லாம் தீர்ந்து போய்விடும் நீதான் கருணை வைக்கவேண்டும் அம்மா .என்று வேதனையோடு சொல்லக்கூடிய எத்தனையோ குடும்பங்களும் உண்டு.
எல்லோருக்கும் படியளக்க கூடிய நீ எங்களுக்கு மட்டும் பாராமுகமாக இருக்கிறாயே. சதாகாலமும் உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடிய எங்களுக்கு வழி காட்டக் கூடாதாம்மா மனதிலே உன் நாமத்தைச் சொல்லி அழுவதற்கும் பிரார்த்தனை செய்வதற்கு ம்கூட தெம்பில்லாமல் போய்விட்டதே அம்மா என்று கண்ணீரோடு நிற்கின்ற தாய்மார்களும் இருக்கின்றார்கள்.
உன்னுடைய வேதனை கலந்த கோரிக்கைகளை அம்மா கேட்கவில்லை என்று என்றும் நினைக்காதே.
உன்னுடைய நிலைமைக்குத் தகுந்த உயர்வைத் தருவதற்கு ஓரிடத்தை அம்மா நிச்சயம் காட்டுவாள்.
இவ்வளவு சிரமத்திலும் உன் குழந்தைகள் மீது நீ எல்லையில்லாத அன்பு வைத்திருக்கிறாய். அவர்கள் மீது பாசம் வைத்து இருக்கிறாய். எப்படியாவது அவர்களை வாழ வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறாய்.
அதுபோல்தான் அம்மாவும் உன் மீது கருணையோடு இருக்கிறாள். உன் மீது அன்போடு இருக்கிறாள் உனக்கு ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டும் தான் இருக்கிறாள்.
சில நேரங்களில் எவ்வளவு பக்திமானாக இருந்தாலும் அவனது ஊழ்வினை கர்மா அதிகமாக இருந்தால் அதைக் கழித்த பிறகு அருள்பாலித்தால் உன் காலம் முழுவதும் உன் குடும்பத்தோடு நலமாக இருக்கலாம் என்றுகூட வராகி நினைத்துக் கொண்டிருக்கலாம்.
உன்னை சுத்தப்படுத்தி கொஞ்சமாக இருக்கக்கூடிய கர்மாவை கழிக்க வைத்து ஒரு பெரிய பொக்கிஷத்தை உனக்குத் தருவதற்கு வராகி நினைத்துக் கொண்டிருக்கலாம்.
ஆகவே மனம் வருந்திக் கொண்டே இருக்காதே. நிச்சயம் வாழ்க்கையில் நீ உயர்ந்த நிலையை அடைவாய் .உன் பெண் குழந்தைகளுக்கு நல்ல வரன் அமைத்து தருவாள். படித்து முடித்து இருக்கும் உன் மகனுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவாள்.
நீண்ட நாட்களாக உனக்கு வராமல் இருக்கக்கூடிய நீ கொடுத்து வைத்திருந்த பணம் தானாக உன் வீடு தேடி வர வைப்பாள்.
மனம் சோர்ந்து போய் இருக்கின்ற பொழுது ஒரு நல்ல குருவையும் அடையாளம் காட்டுவாள்.
அடமானம் வைத்திருக்கக்கூடிய நகைகள் எல்லாம் வீட்டு பத்திரங்களை எல்லாம் திருப்பி விடுவாய். வாடகை வீட்டிலிருந்து உன் சொந்த வீட்டிற்கு நீ குடி போகும்படி செய்து விடுவாள்.
ஊரே உன்னை உயர்ந்து பார்க்கின்ற வாரு வாழ்க்கையை உயர்த்தி தருவாள்.
நீண்ட நாள் ஆகியும் உன் மகளுக்கும் உன் மருமகளுக்கும்
குழந்தை இல்லாமல் இருந்தால் உன் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு புத்திர பாக்கியத்தையும் தருவாள்.
சதாகாலமும் மருந்து மாத்திரைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய கணவனுக்கும் மனைவிக்கும் நோயினை நலம் ஆக்கித் தருவாள்.
வராகிமீது நம்பிக்கையோடு இரு. நீ வேலை பார்க்க கூடிய இடத்தில் எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் அத்தனை எதிர்ப்புகளையும் இல்லாமல் செய்து தருவாள். மேலதிகாரிகள் உன் மீது பிரியமாக இருக்கின்ற வாரு ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தருவாள்.
நீண்ட காலமாய் பதவி உயர்வு இல்லாமல் இருந்தால் அந்த பதவி உயர்வையும் உண்டாக்கி தருவாள்.
கருணையே வடிவாக இருக்கக்கூடிய தாய் வராகி உன் நலத்தில் அக்கறை உள்ளவள் அனுதினமும் வணங்கி பார் மேலே சொன்ன அத்தனையும் உன் வாழ்க்கையில் கிடைத்து மன மகிழ்ச்சியோடு வாழ்வாய் என்பது சத்தியமான வாக்கு.