ஸ்ரீ சூர்ய பகவான்: (சில சுவாரஸ்யமான தகவல்கள்)

68

பெற்றோர்: தாய்-அதிதி
தந்தை-காச்யபர்.
அதிதியின் மகன் என்பதால் ஆதித்யன் என்ற பெயர் உண்டு.
சூரியனின் ரதம் ஒற்றை சக்கரம் மட்டுமே கொண்டது.
ஏழு குதிரைகள் சூரியனின் ரதத்தை இழுக்கின்றன. அவை: 1.காயத்ரி 2.உஷ்ணிக் 3.அனுஷ்டுப் 4.பிரகதி 5.பங்தீ 6.திருஷ்டுப் 7.ஜகதி (எ) சந்தஸ்.
சகோதரர்: கருடன், அருணன்.
சூரியனின் சகோதரன் அருணன் அவர் பயணிக்கும் தேரின் சாரதியாவான்.
மனைவிகள்: உஷை , பிரத்யுஷை.
உஷையின் நிழலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவள் பிரத்யுஷை. சூரியன் உதிக்கும் நேரம் உஷத் காலம். சூரியன் மறையும் நேரம் பிரத்யுஷத் காலம்.
மகன்கள்:
சூரியன்-சாயா தேவி புத்ரன் “மந்தன்”. யமன், அச்வினி தேவர்கள், கர்ணன், சுக்ரீவன் ஆகியோரும் சூரிய புத்திரர்கள்.
மகள்கள்: யமுனை, பத்திரை எனும் இருவர்.
பெயர்கள்: இந்து புராணத்தின் படி சூரியனின் 12 பெயர்கள். 1.மித்ரா 2.ரவி 3.சூர்யா 4.பானு 5.ககன் 6.பூஷா 7.ஹிரண்யகர்ப்பன் 8.மரீசி 9.ஆதித்யா 10.ஸவித்ரன் 11.அர்க்கன் 12.பாஸ்கரன்.
“ஆதித்ய ஹ்ருதயம்” என்று சூரியனை போற்றும் துதியை ‘அகத்தியர்’ ராமபிரானுக்கு உபதேசம் செய்தார். அதன்படி சூரியனை துதித்து இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றார் இராமபிரான்.
சூரிய பூஜை நடைபெறும் கோயில்கள்:
ஆண்டின் சில நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் மூலவர் மீது விழும். இச் சமயத்தில் இக்கோயிலில் பூஜை நடைபெறும். இதற்கு சூரிய பூஜை என்று பெயர்.
1.கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், (சித்திரை-13, 14, 15)
2.ஆடுதுறை (அன்னியூர்) ஆபத்சகாயேஸ்வரர் கோயில், (பங்குனி மாதம் 5 நாட்கள்)
3.திருக்கோடிக்காவல் திரு கோடீஸ்வரர் ஆலயம்,
4.செம்பனார்கோயில் ஸ்வர்ணபுரீஸ்வரர் ஆலயம்,(சித்திரை 7 முதல் 18 வரை)
5.திருக்கண்டியூர் ப்ரம்மசிரக் கண்டீஸ்வரர் ஆலயம் (மாசி-13, 14, 15, தேதிகளில் மாலை 4.45 முதல் 6.10 வரை)
6. திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் ஆலயம். (பங்குனி-13, 14, 15)
7.கோயிற்பத்து (திருத்தெளிசேரி) பார்வதீஸ்வரர் கோயில். (பங்குனி 13 முதல் 10 நாட்கள்)
8.திருநெல்லிக்கா நெல்லிவனநாதர் கோயில். (ஐப்பசி தேய்பிறை சதுர்த்தி முதல் 7நாட்கள் மற்றும் மாசி மாதம் 18 தேதி முதல் 7 நாட்கள்)
9.பாரியா மருதுபட்டி மருந்தீஸ்வரர் கோயில். (சிவராத்திரி மறுநாள் அதிகாலை)
10.மேலச்செவல் ஆதித்த வர்ணேஸ்வரர் கோயில். (செப்டம்பர் 23, 24, 25)
11.திருவிசநல்லூர் சிவயோகிநாதர் கோயில். (சித்திரை-
1, 2, 3)
12.பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில். (சித்திரை-1 முதல் 7 வரை)
13.திருமீயச்சூர் மேகநாதஸ்வாமி கோயில். (சித்திரை மாதம்-21 முதல் 27 வரை)
14.மகேந்திரபள்ளி திருமேனி அழகர் கோயில். (பங்குனி-1 முதல்
7 வரை)
15.இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில். (ஆவணி-31, புரட்டாசி-1, 2, பங்குனி-13, 14,15.)
16.குருந்தமலை குழந்தை வேலாயுத ஸ்வாமி கோயில் (மார்ச் 22 அஸ்தமன சமயம்)
17. ஸ்ரீ வைகுண்டம் வைகுண்ட நாதஸ்வாமி (கள்ளபிரான்) கோயில் (சித்திரை-6, ஐப்பசி-6)
18. உவரி சுயம்பு லிங்கஸ்வாமி (மார்கழி மாதம் முழுவதும் காலை 7 மணிக்கு)
இவை தவிர சூரியன் தேவ வடிவில் இருந்து ஆகம விதிப்படி சிவலிங்கம் அமைத்து பூஜித்து பேறு பெற்ற பல தலங்கள் உள்ளன.
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில், பரிதிநியமம் பாஸ்கரேஸ்வர் (பரிதியப்பர்) கோயில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுத ஸ்வாமி கோயில், திருசோற்றுத்துரை சோற்றுத்துரைநாதர் கோயில் மற்றும் பல கோயில்கள்.
ஒரிசா மாநிலத்தின் “கொனார்க்”
மற்றும் குஜராத் “மொதேரா” சூரியன் கோவில்கள் புகழ் பெற்றவையாகும்.